Published : 06 Dec 2019 08:53 AM
Last Updated : 06 Dec 2019 08:53 AM

மொழிபெயர்ப்பு: குழந்தைகளுக்கு நிலக்கடலையும் முட்டையும் கொடுத்தால் ஒவ்வாமை வராது!

Introducing peanuts, eggs early to infants may prevent allergy development: Study

London:

Early introduction of certain foods known to cause allergies -- like peanuts and eggs -- to infants can prevent them from developing an allergy even if the children do not adhere strongly to the diet, a study says.

The study, published in the Journal of Allergy and Clinical Immunology, is a continuation from The Enquiring About Tolerance (EAT) study in the UK where over 1300 three-month old infants were recruited and placed into one of two groups.

One was introduced to six allergenic foods (including peanut and egg) from three months of age alongside breastfeeding, and another group was exclusively breastfed for six months.

The group which received the allergenic foods was called the Early Introduction Group (EIG), and the one which was only breastfed was termed the Standard Introduction Group (SIG).

The researchers said among children with food sensitisation at study enrolment, about 34 per cent in the SIG developed food allergy, compared to 19 per cent of the infants in the EIG.

According to the researchers, an early introduction of allergenic foods to infants who were not already predisposed to food allergies was not linked to an increased risk of developing a food allergy.- PTI

குழந்தைகளுக்கு நிலக்கடலையும் முட்டையும் கொடுத்தால் ஒவ்வாமை வராது!

லண்டன்:

ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பண்டங்களாக அறியப்படும் நிலக்கடலை, முட்டை போன்றவற்றைப் பிறந்த குழந்தைகளுக்கு கொடுத்துப் பழக்கினால் அத்தகைய ஒவ்வாமை ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பிறந்து மூன்று மாதங்களே ஆன 1300 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டன. இந்தக் குழந்தைகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஒரு குழுவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தாய்பால் மட்டுமின்றி நிலக்கடலை, முட்டை உள்ளிட்ட ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய ஆறு விதமான உணவுப் பண்டங்களும் சிறிதளவில் கொடுக்கப்பட்டன. மற்றொரு குழுவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்டப்பட்டது.

ஒவ்வாமை உணவு அளிக்கப்பட்ட குழுவுக்கு ‘ஆரம்பக்கால அறிமுகக் குழு’ (ஆஅகு) என்று பெயரிடப்பட்டது. தாய்ப்பாலை மட்டுமே அருந்திவந்த குழந்தைகளாலான குழுவுக்கு, ‘தரநிலை அறிமுகக் குழு’ (தஅகு) என்று பெயரிடப்பட்டது. இந்த சோதனை காலம் முடிந்த பிறகு தஅகு பிரிவைச் சேர்ந்த குழந்தைகளில் 34 சதவீதத்தினருக்கு பின்னாளில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டது. ஆனால், ஆஅகு பிரிவு குழந்தைகளில் 19 சதவீதத்தினருக்கு மட்டுமே உணவு ஒவ்வாமை சிக்கல் தலைகாட்டியது.

ஆகையால், ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய உணவு பண்டங்களை ஆரம்பக்கட்டத்திலேயே குழந்தைகளுக்கு கொடுத்துப் பழக்கினால் உணவு ஒவ்வாமையை தவிர்க்கலாம் என்கிறனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆய்வு முடிவு ‘அலர்ஜி அண்டு கிளின்க்கல் இம்யூனாலஜி’ ஆய்விதழில் வெளிவந்துள்ளது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x