Published : 04 Dec 2019 10:43 AM
Last Updated : 04 Dec 2019 10:43 AM
Parental control, value education need of the hour for boys: Kiran Bedi
New Delhi,
Dec 2 Puducherry Lt Governor Kiran Bedi said on Monday that parents only know how to control girls, but they should keep their sons under control and regularly check their activities to prevent crimes against women.
She also suggested that instead of focussing on exam- oriented education, students must be taught value education and good morals.Reacting to the gruesome rape and killing of a veterinarian in Hyderabad, Bedi told PTI that the basic reason for increasing crimes against women was "the way the parents are grooming their sons. Boys are not in their control.
They should keep their sons under control and regularly check their activities"."We only know to control girls but don't know how to bring up boys. Parents are even scared of telling their grown up sons to come home early," she said, adding that the boys should be prevented from falling into bad company.
The 1972-batch IPS officer was of the view that value education was not taught in educational institutions.
"They are only exam oriented and boys get to know only to read and write... This kind of growth is a threat to the security of women", she said.
"Nirbhaya funds should be effectively utilised and patrolling increased in the evening hours in dark areas. There should be more police mobility on the road. We will be able to instil fear on the potential criminals with this. Wrongdoers should have a fear of getting caught," she said.
-PTI
மகன்களுக்கு அறநெறிகளைப் போதியுங்கள்: கிரண்பேடி
பெண் குழந்தைகளைக் கட்டுப்படுத்த மட்டுமே பெற்றோர் தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால், தங்களுடைய மகன்களை அவர்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
அவரவர் வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பெற்றோர் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கலாம் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
தேர்வை மட்டுமே குறிவைத்து கல்வி கற்பிக்கப்படுவதற்கு பதிலாக மாணவர்களுக்கு அறநெறிகளையும் நற்பண்புகளையும் போதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் அண்மையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கருத்துக் கேட்டபோது, “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணம் பெற்றோர் தங்களுடைய மகன்களை வளர்க்கும் முறைதான்.
ஆண் குழந்தைகள் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இல்லை. தங்களுடைய மகன்களைப் பெற்றோர்கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவர்களுடைய நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என்று கிரண்பேடி கூறினார். “நமக்கு சிறுமிகளை மட்டுமே கட்டுப்படுத்த தெரியும்.
சிறுவர்களை வளர்க்க தெரியவில்லை. வளர்ந்த ஆண் பிள்ளைகள் சீக்கிரம் வீடு திரும்பும்படி சொல்வதற்குக்கூட பெற்றோர் பயப்படுகிறார்கள்” என்றவர், கூடா நட்பில் சிறுவர்கள் சிக்கிக் கொள்ளாதபடி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
1972 பேட்ச்சில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான கிரண்பேடி கல்வி நிலையங்களில் அறநெறிக் கல்வி கற்பிக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
“தேர்வை மட்டுமே முன்னிலைப்படுத்தி கல்வி நிலையங்கள் செயல்படுகின்றன. ஆகையால் ஆண்களுக்குப் படிக்கவும் எழுதவும் மட்டும்தான் தெரிந்திருக்கிறது. இத்தகைய வளர்ச்சியானது பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலே” என்றார்.
“நிர்பயா நிதியம் சிறந்த முறையில் செல வழிக்கப்பட வேண்டும். குறிப்பாக இருள் சூழ்ந்த பகுதிகளில் மாலை வேளையில் ரோந்துப் பணி அதிகரிக்கப்பட வேண்டும். காவல்துறையின் நடமாட்டம் தெருக்களில் அதிகரிக்கப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கையின் மூலமாகக் குற்றச் செயலில் ஈடுபட நினைப்பவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்த முடியும். மாட்டிக் கொள்வோம் என்கிற பயத்தைத் தவறு செய்பவர்களுக்கு உண்டாக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT