Published : 04 Dec 2019 10:21 AM
Last Updated : 04 Dec 2019 10:21 AM
ஒரு செயலின் விளைவைச் சுட்டிக்காட்டும் சொற்கள் ஆங்கிலத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. ‘Result’-ஐ குறிக்கும் இணைப்புச் சொற்கள் இவை. ‘As a result’, ‘as a consequence’, ‘therefore’, ‘thus’, ‘accordingly’ ஆகிய சொற்கள் இந்த வைகையைச் சேர்ந்தவை.
As a result (அதனால், அதன்விளைவாக) உதாரணத்துக்கு, I have learnt psychology. As a result, I was ableto talk and relieve my sister from severe stress.
நான் உளவியல் படித்திருக்கிறேன். அதனால் என் சகோதரியிடம் பேசி அவளுடைய மன அழுத்தத்தை என்னால் குறைக்க முடிந்தது.
As a Consequence (அதன் விளைவாக) உதாரணத்துக்கு, Danush has skipped school on may occasions. As a consequence, he failed his Mathematics test.
பல சந்தர்ப்பங்களில் தனுஷ் பள்ளிக்குச் செல்லவில்லை. அதன் விளைவாகத்தான் அவன் கணித தேர்வில் தோல்வி அடைந்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT