ஜி.எஸ்.எஸ்.
பெருமிதத்துடன் மலை ஏறினேன்!
பல்லவியும், சிந்துவும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள். அவர்களது உரையாடலின் ஒரு பகுதி இது.
Pallavi – I climed Pallavaram mountain yesterday.
Sindhu – It is proudful. Good.
Pallavi – I had four friends at that time.
Sindhu – Are they your classmates?
Pallavi – Three of them are my classmates and one is my sectionmate.
Sindhu – Will you climb the mountain again? I would like to join you.
Pallavi – Yes you can.
மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.
மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளை பார்ப்போம். பேச்சின் போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.
Clime என்பது climate என்பதன் சுருக்கம். Clime என்பது பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை. மரம், மலை, மாடிப்படி போன்றவற்றில் ஏறுவதை climb என்ற சொல்லால் குறிப்பார்கள்.
It is proudful என்பது தவறு. சிந்து, It is a matter of pride என்று கூறியிருக்க வேண்டும்.
‘’I had four friends at that time” என்று பல்லவி கூறுகிறாள். அவள் கூற நினைப்பது மலையேறும்போது அவளுடன் நான்கு தோழிகள் இருந்தார்கள் என்பதைத்தான். அவளுக்கு அப்போது மொத்தமாகவே நான்கு தோழிகள் மட்டுமே என்று அர்த்தமல்ல. எனவே I went for the expedition with four of my friends என்று அவள் குறிப்பிட்டிருக்கலாம்.
Schoolmate, classmate என்றெல்லாம் குறிப்பிடுவோமே தவிர, sectionmate என்பதில்லை. எனவே one of them is studying in my section and the other three are studying in other sections என்று அவள் குறிப்பிட்டிருக்கலாம்.
WRITE A COMMENT