Marvel pays tributes to Stan 'The Man' Lee on first death anniversary
Los Angeles,
Nov 13 (PTI) Marvel Studios has paid homage to Stan Lee on the one-year death anniversary of the comic book legend.
Lee, who revolutionised pop culture as the co-creator of iconic superheroes like Spider-Man and The Hulk, died on November 12, 2018 at age 95.
In a Twitter post on Tuesday, Marvel honoured Lee's legacy with an illustration of the veteran surrounded by many of the superheroes he helped create.
"Remembering Stan 'The Man' Lee: his legacy will live on in the Marvel Universe and the hearts of Marvel fans everywhere," the tweet read.
From Spider-Man to Black Panther to the X-Men and the Fantastic Four, Lee collaborated with other authors and illustrators to put his imagination on the page.
These superheroes would be followed by Iron Man, Thor and Doctor Strange -- all three have churned out many money-spinning film franchises.
He has appeared in cameo roles in nearly every Marvel movie -- with a final posthumous cameo in summer blockbuster "Avengers: Endgame".
- PTI
ஸ்டான்லீக்கு மார்வல் நிறுவனத்தின் முதலாமாண்டு நினைவஞ்சலி
லாஸ் ஏஞ்சல்ஸ்
காமிக்ஸ் புத்தக ஜாம்பவான் ஸ்டான்லீ. அமெரிக்காவைச் சேர்ந்த இவர் 95 வயதில் 2018 நவம்பர் 12 அன்று காலமானார். இந்த காமிக்ஸ் மேதைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தி உள்ளது மார்வல் ஸ்டூடியோஸ் நிறுவனம்.
பாப் கலாச்சாரத்தில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்தவர் லீ. ‘ஸ்பைடர் மேன்’, ‘தி ஹல்க்’ ஆகிய சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்களைப் படைத்தவர்களில் இவரும் ஒருவர். இந்த முதுபெரும் ஆளுமைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு ட்விட்டர் பதிவைச் செவ்வாய் அன்று வெளியிட்டது மார்வல் நிறுவனம். அதில் லீயைச் சுற்றிலும் அவர் உருவாக்கிய சூப்பர்ஹீரோ கதாப்பத்திரங்கள் இருப்பது போன்ற சித்திரம் வரையப்பட்டு இருந்தது.
“ஸ்டான் ‘தி மேன்’ லீயின் நினைவில்: மார்வல் பிரபஞ்சத்திலும் உலகெங்கிலும் உள்ள மார்வலின் விசிறிகளின் இதயத்திலும் இவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும்” என்ற பதிவும் அதில் காணப்பட்டது.
பிற எழுத்தாளர்கள் மற்றும் சித்திர கலைஞர்களுடன் இணைந்து ‘ஸ்பைடர் மேன்’, ‘பிளாக் பேந்தர்’-ல் தொடங்கி ‘எக்ஸ்-மென் அண்ட் தி ஃபெண்டாஸ்டிக் ஃபோர்’ வரை
பல்வேறு படைப்புகளை உருவாக்கியவர் இவர்.
இது மட்டுமின்றி அவர் உருவாக்கிய ‘ஐயன் மேன்’, ‘தோர்’, ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்’ ஆகிய மூன்று சூப்பர்ஹீரோக்களும் பல திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு வசூல்
வேட்டை தேடித் தந்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட மார்வல் நிறுவனத்தின் அனைத்துப் படங்களிலும் கவுரவ வேடங்களில் லீ தோன்றி இருக்கிறார். அவருடைய இறப்புக்குப் பிறகு இந்த ஆண்டு கோடையில் வெளியாகி சக்கைப்போடு போட்ட ‘அவஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்திலும் அவர்கவுரவ வேடத்தில் தோன்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிடிஐ
WRITE A COMMENT