ஆங்கிலத்தை சவாலான மொழியாக மாற்றும் வேலையைச் செய்பவை Prefix, Suffix எனலாம். அதாவது சொற்களுக்கு முன்னும் பின்னும் சேர்க்கப்படும் சில எழுத்துக்கள். முன்னால் வருவது Prefix, பின்னால் வருவது Suffix.
இவற்றால் ஒரு சொல்லின் பொருள்முற்றிலுமாக மாறிவிடும். உதாரணத்துக்கு, operation என்றால் அறுவை சிகிச்சை. அதே Co-operation என்றால் ஒத்துழைத்தல். இங்கு Co என்ற prefix, operation என்ற சொல்லுக்கு முன்னால் இடம்பெறும் போது புதிய சொல் பிறந்து விடுகிறது. இதை புரிந்துகொள்ளாதவர்கள் கடைசி வரை ஆங்கிலத்தில் கில்லாடி ஆக முடியாது. இதே போன்று அடிக்கடி நம்மைகுழப்பும் சில prefix-களை பார்ப்போமா!முதலாவதாக தெரிந்து கொள்ள வேண்டிய prefix- ‘Dis’.
இது opposite of, not போன்ற எதிர்ப்பதத்தை குறிக்கும்.
உதாரணத்துக்கு, Agree என்றால் ஏற்றுக் கொள்ளுதல். இதற்கு எதிர்சொல்லான மறுப்பதை குறிக்கும் சொல், Disagree.
Appear என்றால் தோன்றுதல். இதற்கு எதிர்சொல்லான மறைதலைக் குறிக்கும் சொல், Disappear,Integrate என்றால் ஒன்றிணைத்தல். இதற்கு எதிர்சொல்லான பிரித்தலுக்குரிய சொல் Disintegrate.
Approve என்றால் ஒப்புதல் வழங்குதல். இதற்கு நேரெதிரான நிராகரிப்பை குறிக்கும் சொல் Disapprove.
இதேபோல ஏகப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்துபவை, il-, im-, in-, ir- ஆகிய prefix-கள்.
WRITE A COMMENT