அறிந்ததும் அறியாததும்: அமைதி காக்கும் எழுத்துக்கள்!


அறிந்ததும் அறியாததும்: அமைதி காக்கும் எழுத்துக்கள்!

சொற்களுக்கு இடையில் எந்தவிதியின்படி சத்தம் இன்றி எழுத்துக்கள் இடம்பெறும் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவற்றில் மேலும் சில:

மவுனமான P

N, S ஆகிய எழுத்துக்களுக்கு முன்பாக P இடம்பெறும்போது அது மவுன எழுத்தாகிவிடும். உதாரணத்துக்கு Pneumonia, Pseudo, Psychiatry. இது தவிர Receipt-லும் p ஒலிக்காது.

மவுனமான S

L-க்கு முன்பாக இடம்பெறும் போதுS மவுனமாகிவிடும். உதாரணத்துக்கு, Island, Isle, Aisle, Islet.

மவுனமான T

S-க்குப் பின்னால் T வரும்போதெல்லாம் அதை உச்சரிக்கவே கூடாதுஎன்பது பொதுவான விதி. உதாரணத்துக்கு, Castle, Christmas, Fasten, Listen, Whistle. இது போக, Often,Soften, Rapport, Ballet ஆகிய சொற்களையும் T இன்றித்தான் உச்சரிக்க வேண்டும்.

மவுனமான U

G-க்குப் பின்னாலும் Vowel-க்குமுன்னாலும் இடம்பெறும்போதெல்லாம் U-க்கு சத்தம் கிடையாது.

உதாரணத்துக்கு, Guess, Guidance, Guitar, Guest, Guilt, Guard.

மவுனமான W

ஒரு சொல்லின் முதல் எழுத்தாகவும் அதேநேரம் R-க்கு முன்பாகவும் இடம்பெறும்போது W சத்தம்போடாது.

உதாரணத்துக்கு, Wrap, Write, Wrong, Wrestle, Wrist. இது தவிர Who,Whose, Whom, Whole, Whoever, Answer, Sword, Two. சொற்களிலும் W-க்கு ஒலி கிடையாது.

இதுதவிர ஆங்கில உச்சரிப்பை வளப்படுத்திக் கொள்ள சிறந்த வழி, ‘தி வேர்ல்ட் பெஸ்ட்’ பட்டம் வென்ற சென்னை சிறுவன் லிடியன் நாதஸ்வரம் பாணியில் ஆங்கில அனிமேஷன்திரைப்படங்களை ‘சப்டைட்டில்’- உடன் பார்க்கலாம்

FOLLOW US

WRITE A COMMENT

x