ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்?: சரி செய்யப்பட்டது!


ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்?: சரி செய்யப்பட்டது!

மணியும், பிரதீப்பும் அடுத்தடுத்த தெருக்களில் வசிப்பவர்கள். இதற்கு முன் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டதில்லை. முதல் முறையாக அவர்கள் பேசிக் கொள்ள, அந்த உரையாடலின் ஒரு பகுதி இது.

Mani – How do you go to school?

Pradeep – I am running my cycle and go to school.

Mani – But today you have not come in your cycle!

Pradeep – My cycle is repair.

Mani – What happened?

Pradeep – Its carrier is damaged and its break is not functioning well. Today they will be set right.

Mani – So tomorrow can I see you riding your cycle?

Pradeep – Of course.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசி​யுங்கள்.

மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

பிரதீப் I am running my cycle என்று கூறுவது தவறு. I am using my cycle என்று கூறலாம்.

My cycle is repair என்பதும் தவறு. My cycle is under repairs என்று கூறுவது சரியானது. இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள். ஒன்றில் கோளாறு ஏற்படும்போது அது ரிப்பேர் ஆகிவிட்டது என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். அது தவறு. அந்தக் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகுதான் அது repair (re-pair) ஆனதாகப் பொருள்.

சைக்கிளில் உள்ளது carrier சரிதான். ஆனால், நமது பணி மற்றும் பதவி உயர்வுகள் என்ற பொருளில் பயன்படுத்தப்படும்போது career என்பதுதான் சரியான வார்த்தை.

Break என்பது இந்த உரையாடலின் தவறான வார்த்தை. இதற்குப் பொருள் உடைத்தல். சைக்கிளிலுள்ள பிரேக் என்பது brake.

FOLLOW US

WRITE A COMMENT

x