மொழிபெயர்ப்பு: குறைந்தது 6 புத்தகங்களை குழந்தைகள் வாசிக்க வேண்டும்: ‘வாசிப்பு சவால்’


மொழிபெயர்ப்பு: குறைந்தது 6 புத்தகங்களை குழந்தைகள் வாசிக்க வேண்டும்: ‘வாசிப்பு சவால்’

Children to read 6 or more books in 6 weeks in 'Reading Challenge'

Kolkata

Children between the ages of 5 and 11 years will read six or more books from a collection of handpicked titles by British Council, at a reading session to be held for six weeks from November 4.

A British Council, Kolkata, spokesman said, this 'Reading Challenge' event, is held in British Council Kolkata office, is being conducted in association with the 'Reading Agency, UK.'

The six-week long event is expected to encourage children to read for pleasure, for improving their English, developing their reading skills, and building their confidence, the spokesman said.

The theme of the 'Reading Challenge' is to celebrate 50 years of human landing on the moon.
The British Council will also organise multiple workshops for participants to help them improve their reading skill and acquire storytelling and creative writing skills.

குறைந்தது 6 புத்தகங்களை குழந்தைகள் வாசிக்க வேண்டும்: ‘வாசிப்பு சவால்’

கொல்கத்தா

பிரிட்டிஷ் கவுன்சில் பரிந்துரைத்த தலைப்புகளின் கீழ் உள்ள புத்தகங்களை 5 முதல் 11 வயது உட்பட்ட குழந்தைகள் வாசிக்க வேண்டும். அதுவும் ஆறு வாரங்களில் ஆறு அல்லது அதற்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசிக்க வேண்டும்என்ற போட்டியை நவம்பர் 4 அன்று பிரிட்டிஷ் கவுன்சில் தொடங்கி வைத்தது.

‘வாசிப்பு சவால்’ என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி கொல்கத்தாவில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது. இதை பிரிட்டிஷ் கவுன்சில், ஐக்கிய ராஜ்ஜியத்தை சேர்ந்த ‘ரீடிங்க் ஏஜன்சி, யூ.கே.’ என்ற
நிறுவனத்துடன் இணைந்து நடத்துவதாக பிரிட்டிஷ் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

குழந்தைகள் வாசிப்பின் சுவையை உணர, அவர்களுடைய ஆங்கிலப் புலமையை மெருகேற்ற, வாசிப்புத் திறனை மேம்படுத்த, தன்னம்பிக்கையை வளர்க்கஆகியவற்றுக்காகத்தான் இந்த நிகழ்ச்சிநடத்தப்படுவதாக பிரிட்டிஷ் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

நிலவில் மனிதன் கால்பதித்த நிகழ்வின் 50-வது ஆண்டை கொண்டாடுவதே ‘வாசிப்பு சவால்’ போட்டியின் கருப்பொருளாகும். இதுதவிர பங்கேற்பாளர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், அவர்கள் கதைசொல்லும் ஆற்றலை பெறவும் படைப்பூக்கம் மிக்க எழுத்துத் திறனை வளர்க்கவும் பல பயிலரங்குகளை பிரிட்டிஷ் கவுன்சில் நடத்தவிருக்கிறது. - பிடிஐ

FOLLOW US

WRITE A COMMENT

x