மொழிபெயர்ப்பு: மத்தியப்பிரதேசத்தில் சீக்கிய அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம்


மொழிபெயர்ப்பு: மத்தியப்பிரதேசத்தில் சீக்கிய அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம்

MP govt to set up Sikh museum and research centre

Bhopal

The Congress government in Madhya Pradesh will set up a Sikh museum and research centre in Jabalpur to mark the 550th 'Prakash Parv' of Guru Nanak Dev.

The government also decided to develop six places associated with the founder of Sikhism in the state as religious tourist spots.

"The Sikh Museum and Research Centre would be developed at the cost of Rs 20 crore. The meeting chaired by Chief Minister Kamal Nath on Friday also decided to allocate Rs 12 crore to develop six Sikh places associated with Guru Nanak Dev in Madhya Pradesh as religious tourist spots," the official said.

These centres are: Tekri Sahib (Bhopal), Imli Sahib and Betma Sahib (Indore), Gurdwara (Omkareshwar), Gurunanak Ghat Gurudwara (Ujjain) and Gwari Ghat Gurudwara (Jabalpur).

The main government offices, including the secretariat and the state Legislative Assembly building, will be lit up and decorated on November 12, the official added. -PTI

மத்தியப்பிரதேசத்தில் சீக்கிய அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம்

போபால்

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவின் 550-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜபல்பூரில் சீக்கிய அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை நிறுவ மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசு முடிவெடுத்துள்ளது.

இது போக சீக்கிய மதத்தை நிறுவியவருடன் தொடர்புடைய மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களைசமய சுற்றுலா தலங்களாக மேம்படுத்தவும் அரசு தீர்மானித்துள்ளது.

“சீக்கிய அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையமானது ரூ.20 கோடி செலவில் கட்டியெழுப்பப்படும். இது தொடர்பான கூட்டத்
துக்கு மத்தியப்பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் தலைமைதாங்கினார். அப்போது அவர், குருநானக் தேவுடன் தொடர்புடைய
மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஆறுஇடங்களை சமய சுற்றுலா தலங்களாகமேம்படுத்துவதற்காக ரூ.12 கோடியைஒதுக்க முடிவெடுத்தார்” என்றுஅதிகாரி ஒருவர் தகவல் அளித்தார்.

போபாலில் உள்ள தெக்ரி சாஹிப், இந்தூரில் உள்ள இம்லி சாகிப் மற்றும் பெத்மா சாகிப், ஓம்காரேஷ்வரில் உள்ள குருத்துவாரா, உஜ்ஜைனில் உள்ள குருநானக் கட் குருத்துவாரா மற்றும் ஜபல்பூரில் உள்ளகுவாரி கட் குருத்துவாரா ஆகியஇடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதை முன்னிட்டு, நவம்பர் 12-ம்தேதி போபால் தலைமைச் செயலகம் மற்றும் மாநில சட்டமன்ற கட்டிடம் ஆகியவை அலங்கரிக்கப்பட்டு ஒளிவிளக்குகள் ஏற்றப்படும் என்றும் அதிகாரி தெரிவித்தார்.- பிடிஐ.

FOLLOW US

WRITE A COMMENT

x