ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்?: அது ஒரு நல்ல தீர்மானம்


ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்?: அது ஒரு நல்ல தீர்மானம்

ஜி. எஸ்.எஸ்

மதன்குமாரின் வீட்டுக்கு அவனது அத்தை மகன் அமுதன் வந்திருக்கிறான். அவர்கள் இருவருக்குமிடையே நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதி இது.

Amuthan - At which time are you sleeping daily?

Madankumar – Earlier I used to sleep at 11.00 P.M.

Amuthan - My God!Madankumar –But now-a-days I have left the late sleeping habits.

Amuthan - That is a better decision

Madankumar – How many hours do you sleep?

Amuthan - I sleep seven hoursMadankumar – During examination days?

Amuthan - Three hours only

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசி​யுங்கள்.

மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளை பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

பொதுவாக, பழக்கங்களை குறிப்பிடும்போது present tense-ல் குறிப்பிடுவோம் present continuous tense-ல் அல்ல. (I eat என்பது ​present tense. I am eating என்பது present continuous tense). எனவே Amuthan ‘‘at what time are you sleeping” என்பதற்குப் பதிலாக at what time do you sleep என்று கேட்டிருக்க வேண்டும்.

“Now-a-days I have left the late sleeping habits” என்று மதன்குமார் கூறுகிறான். தமிழில் ஒரு பழக்கத்தை விட்டு விடுவது என்று கூறுவதுண்டு. ஆனால், ஆங்கிலத்தில் அதற்குப் பதிலாக ‘left’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது. I have given up the late sleeping habits என்று கூறலாம்.

இரண்டு விஷயங்களை ஒப்பிடும்போதுதான் better என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். எனவே ‘அது ஒரு நல்ல தீர்மானம்’ என்பதை கூறும்போது Amuthan that is a better decision என்பதற்குப் பதிலாக that is a good decision என்று கூறியிருக்க வேண்டும்.

வேறொரு இடத்தில் I sleep seven hours என்று சொல்லும் அமுதன் இறுதியாக daily என்ற வார்த்தையும் சேர்​த்துக் கொண்டிருந்தால் தவறில்லை.

தேர்வு நாட்களின்போது மூன்று மணிநேரம் மட்டுமே தூங்குவதை, “threehours only” என்று அமுதன் வெளிப்படுத்துகிறான். மூன்று மணிநேரம் ​தூங்கினாலே அதிகம் என்பதை அவன் கூற விரும்பினா​ல் ‘hardly three hours” என்று அவன் கூறியிருக்கலாம்.

FOLLOW US

WRITE A COMMENT

x