ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்?: இது யாருடைய பொம்மை?


ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்?: இது யாருடைய பொம்மை?

ஜி.எஸ்.எஸ்.

தன் தோழியின் வீட்டுக்கு முதல் முறையாக செல்கிறாள் வாணி. அவள் தோழி அப்போது அங்கு இல்லை. தோழியின் அம்மா தேவிகா, வாணியை வரவேற்று உட்காரச் சொல்லி தண்ணீர் கொடுக்கிறார். சில நிமிடங்கள் கழித்து அவர்கள் இருவருக்கிடையே நடைபெறும் உரையாடலின் ஒரு பகுதி இது.

Vani – Auntie, what is the thing in the table?
Devika - Its a new toy.
Vani – For who is the toy?
Devika – For my young son.
Vani – How old is he?
Devika – He is five years old.
Vani – So, he is aged five years old?
Devika - Yes
மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.

மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

Auntie என்பது பேச்சுவழக்கில் தவறில்லை. ஆனால், இது எழுத்து வழக்கில் Aunt என்பதுதான் சரி.

வாணி what is the thing in the table என்று கேட்கிறாள். மேஜைக்குள் இருப்பதைத்தான் in the table என்பதன் மூலம் குறிப்பிட முடியும். மேஜைக்கு மேல் இருப்பதை ‘on thetable’ என்றுதான் குறிப்பிடவேண்டும்.

இது யாருடைய பொம்மை என்று கேட்க நினைத்து For who is the toy? என்று கேட்கிறாள் வாணி. Whose is this toy? என்று அவள் கேட்டிருக்க வேண்டும்.

இதற்கு தேவிகா பதிலளிக்கும்போது For my young Son என்கிறாள். அதாவது இளமைப்பருவத்திலுள்ள மகன் என்பதைக் குறிப்பிட young son எனலாம். இரண்டு குழந்தைகளில் இளையமகன் என்பதைக் குறிக்க வேண்டுமென்றால் younger என்ற
வார்த்தையைப் பயன்படுத்த வேண் டும்.

He is five years old என்று தேவிகா குறிப்பிடுவது சரிதான். ஆனால் So, he is aged five years old? என்று வாணி கூறுவதில் பல தவறுகள் உள்ளன.

Aged என்று வந்த பிறகு அங்கே old என்ற வார்த்தை அவசியமற்றது.

தவிர நம்மில் பலரும் ஒரு கேள்வி யைக் கேட்கும்போதே அந்தத் தொனியின் மூலம் கேள்வியை உணர்த்துகிறோம். (So he is aged five years? என்பதை கேள்விபோலக் கூறிப் பாருங்கள். உங்களுக்கே தெரியும்). ஆனால், வாக்கிய வடிவத்திலும் அது
கேள்விக்குறியதாக இருக்க வேண்டும். So he is aged five years என்றோ, so is he aged five years? என்றோ அது இருக்க வேண்டும்.

FOLLOW US

WRITE A COMMENT

x