உறவினர்களை தமிழில்அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, மாமன் மகள், முறை மாமன் என்று வாய் நிறைய மணக்க மணக்க அழைக்கிறோம். ஆனால், ஆங்கிலத்தில் இந்த முறைகளைக் குழப்பத்துடனேயே பயன்படுத்துகிறோம். Aunt, Uncle என்று யாரையெல்லாம் கூப்பிடலாம், Cousin, Nephew, Niece என்பவை யாரைக் குறிக்கின்றன போன்றவை ஒரே குழப்பமாக இருக்கிறதல்லவா!
உங்களுடைய பெற்றோருடன் பிறந்த சகோதரர் Uncle, சகோதரி Aunt. அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சின்னம்மா எல்லோருக்கும் இவை பொது.
இப்போது Cousin, Nephew, Niece ஆகியவற்றுக்கு வருவோம்.
முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது Nephew என்பது ஆண்பால். Niece என்பது பெண்பால்.
உங்களுடைய சகோதரன் அல்லது சகோதரியின் மகன் மற்றும் உங்களுடைய கணவர் அல்லது மனைவியின் உடன்பிறப்பின் மகனை Nephew என்று அழைக்க வேண்டும்.
அதாவது, உங்களுக்கு அக்கா இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் அக்காவின் மகன் உங்களுக்கு Nephew.
ஒருவேளை அக்காவுக்கு மகள் இருந்தால் Niece. Cousin என்பதோ உங்களுடைய Aunt, Uncle-ன் குழந்தைகளைக் குறிக்கும் சொல். அதாவது அத்தை-மாமாவின் மகன்/மகளும் Cousin தான், பெரியம்மா-பெரியப்பா, சின்னம்மா-சித்தப்பாவின் மகன்/மகளும் Cousinதான்.
WRITE A COMMENT