திருமண விழாவுக்குச் செல்லும்போது, “Where are you going?” என்று யாராவது கேட்டால், ‘Marriage’ என்று சொல்கிறோம். அது சரியா?
இல்லை
Marriage என்பது சட்டரீதியாகத் திருமணம் செய்துகொள்வதை மட்டுமே குறிக்கும் சொல் ஆகும். திருமண விழாவைக் குறிக்கும்
ஆங்கில சொல், ‘Wedding’. அதாவது, The act of marrying, a marriage ceremony. சட்டபடி மணம் முடித்தல், சாப்பாட்டு பந்தி,பார்ட்டி என திருமண விழாவில்நடைபெறும் அனைத்தையும் உள்ளடக்கிய சொல்தான் ‘Wedding’.
கல்யாணத்தை பற்றிப் பேசிவிட்டோம். கல்யாணம் ஆவதற்கு முந்தைய இரவு அதுவரை bachelor ஆக இருக்கும் மணமகனுக்கு அவருடைய நண்பர்கள்(ஆண்) Bachelor Party தருவார்களே, அதைப் பற்றிக்கொஞ்சல் பேசுவோம் வாங்க!
கல்யாணம் ஆகாத ஆண் bachelor என்றால், கல்யாணம் ஆகாத பெண்?Spinster.
(இரண்டு வார்த்தைகளையும் தவிர்த்து ஒண்டிக்கடையாக இருப்பவர்களை குறிக்கும் சொல், Single.)
இனிமேல் மணமகளின் தோழிகளும் Spinster Party கேளுங்க!
WRITE A COMMENT