தானாக இசைக்கும் நானோ கிட்டார் கண்டுபிடிப்பு


தானாக இசைக்கும் நானோ கிட்டார் கண்டுபிடிப்பு

London

Scientists have created a .a tiny suspended wire -- resembling a vibrating guitar string -- which vibrates without any external force.

The experiment, described in the journal Nature Physics, shows how a simple nano-device can generate motion directly from an electrical current.

The researchers at Lancaster University and the University of Oxford in the UK took a carbon nanotube, which is wire with a diameter of about three nanometres, roughly 100,000 times thinner than a guitar string.

They mounted it on metal supports at each end, and then cooled it to a temperature of 0.02 degrees above absolute zero.

The central part of the wire was free to vibrate, which the researchers could detect by passing a current through it and measuring a change in electrical resistance.

Just as a guitar string vibrates when it is plucked, the wire vibrates when it is forced into motion by an oscillating voltage.

When the researchers repeated the experiment without the forcing voltage, the wire oscillated of its own accord under the right conditions.

The nano-guitar string was playing itself, the researchers said.- PTI

தானாக இசைக்கும் நானோ கிட்டார் கண்டுபிடிப்பு

லண்டன்

கிட்டார் இசைக் கருவியில் அதிரும் தந்திகள் இருக்கும். அது போன்ற மிக நுண்ணிய கம்பியை விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள். அதிலும் யாரும் மீட்டாமல், தானாகவே இயங்கக்கூடிய நானோ கிட்டாரைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

யாரும் இசைக்காமலேயே மின்சாரத்தைப் பாய்ச்சுவதன் மூலம் தானாகவே இசைக்கக்கூடிய இந்த கிட்டார் குறித்து நேச்சர் ஃபிசிக்ஸ் ஆய்விதழில் கட்டுரை வெளியாகி இருக்கிறது.

இங்கிலாந்தின் லான்செஸ்டர் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மேற்கொண்ட முயற்சியில், இந்த அரிய கிட்டார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 நானோ மீட்டர் விட்டம் கொண்ட மெல்லிய கம்பி, அதாவது, சாதாரண கிட்டார்களுக்குப் பயன்படுத்தப்படும் கம்பிகளைவிட , ஒரு லட்சம் மடங்கு மெல்லிய கம்பியை இந்தச் சோதனையில் வடிவமைத்திருக்கிறார்கள்.
இந்த இழையை, உலோகத்தினால் ஆன ஒரு பொருளின் இரு முனைகளில் இழுத்து கட்டி, அதை 0.02 டிகிரி வெப்பநிலையில் குளிரவைத்தனர்.

பின்னர், மின்சாரத்தைப் பாய்ச்சியபோது, அந்த இழையின் மத்திய பகுதி தானாகவே அதிரத் தொடங்கியதைக் கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்தனர்.

சாதாரண கிட்டாரில் அதன் தந்தியை மீட்டும் போதுதான் ஓசை எழும். அதேபோல குறிப்பிட்ட மின்னழுத்தத்தைச் செலுத்தத் தொடங்கினால் இந்த நானோ கிட்டாரின் கம்பிகள் தானாக அதிரத் தொடங்கின.

மின்னழுத்தம் ஏதுமின்றி இதே சோதனை மீண்டும் செய்து பார்க்கப்பட்டது. அப்போதும் சரியான நிலையில் கிட்டார் தந்தி தானாக அதிரத் தொடங்கியது. அவ்வாறே நானோ கிட்டார் தந்தி தானாக இசைக்கத் தொடங்கியது என்கிறனர் ஆராய்ச்சியாளர்கள்.

பிடிஐ

FOLLOW US

WRITE A COMMENT

x