மொழிபெயர்ப்பு: செயற்கை தோல் பொருத்தப்பட்ட மனித வடிவிலான ரோபோக்கள் வடிவமைப்பு


மொழிபெயர்ப்பு: செயற்கை தோல் பொருத்தப்பட்ட மனித வடிவிலான ரோபோக்கள் வடிவமைப்பு

'First autonomous humanoid robot with full-body artificial skin developed'

Berlin

Oct 11 (PTI) Scientists have developed a system combining artificial skin with control algorithms, and used it to create the first autonomous humanoid robot with full-body artificial skin. Sensitive synthetic skin enables robots to sense their own bodies and surroundings -- a crucial capability if they are to be in close contact with people.


The artificial skin developed by Gordon Cheng and his team at the Technical University of Munich (TUM) in Germany consists of hexagonal cells about one inch in diameter.

Each is equipped with a microprocessor and sensors to detect contact, acceleration, proximity and temperature, according to the research published in the journal Proceedings of the IEEE.

This not only helps them to move safely. It also makes them safer when operating near people and gives them the ability to anticipate and actively avoid accidents, the researchers said.

The skin cells themselves were developed around 10 years ago by Cheng, Professor of Cognitive Systems at TUM.

- PTI

செயற்கை தோல் பொருத்தப்பட்ட மனித வடிவிலான ரோபோக்கள் வடிவமைப்பு

பெர்லின்

செயற்கைத் தோல் பொருத்தப்பட்ட மனிதனை ஒத்த ரோபோக்களை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கட்டுப்பாட்டு அல்காரிதம் இணைக்கப்பட்டு தன்னிச்சையாக இயங்கக்கூடிய முதல் மனித வடிவிலான ரோபோ இதுவே.

இதில் நுண்ணுணர்வுடைய செ யற்கை தோல் பொருத்தப்பட்டிருப்பதால் தன்னுடைய உடலையும் சுற்றுப்புறத்தையும் இந்த ரோபோவால் உணர முடியும். குறிப்பாக மனிதர்கள் அருகில் இருந்தால் அதை கண்டறிய முடியும். ஜெர்மனியின் முனிச் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கோர்டன் செங் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர்தான் இந்த செயற்கை தோலை உருவாக்கியுள்ளனர்.

இதில் பொருத்தப்பட்டுள்ள ஒரு அங்குலம் விட்டம் கொண்ட அறுகோண செயற்கைத் தோலில் மைக்ரோப்ராசசர் மற்றும் சென்சார்கள் பொறுத்தப்பட்டுள்ளன. வேகவளர்ச்சி, நெருக்கம், வெப்பநிலை ஆகியவற்றைக் கண்டறிய இவை உதவும் என்று ஐ.இ.இ.இ. (இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக் அண்ட் எலக்ட்ரானிக் இன்ஜினீயர்ஸ்) ஆய்வு இதழில் ஆய்வரிக்கை வெளிவந்துள்ளது.

இது ரோபோக்கள் பாதுகாப்பாக இயங்க உதவுவதுடன், ஆபத்தான சூழ்நிலையில் விபத்தில் இருந்து மனிதர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளவும் பேருதவி புரிகிறது. காக்னிட்டிவ் சிஸ்டம்ஸ் துறை பேராசிரியரான கோர்டன் செங் பத்து ஆண்டுகளுக்கு முன்பே தோல் செல்களை முனிச் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வடிவமைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பிடிஐ

FOLLOW US

WRITE A COMMENT

x