ஆங்கிலம் அறிவோம்: வெற்றி மொழி


ஆங்கிலம் அறிவோம்: வெற்றி மொழி

உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள், கல்வியாளர்களின் பொன்மொழிகளைத் தமிழில் தெரிந்துகொள்வோமா மாணவர்களே!
When you talk, you are only repeating what you already know. But if you listen, you may learn something new. - Dalai Lama, Buddhist spiritual leader, Tibet.
பேசும்போது ஏற்கெனவே நீங்கள் அறிந்தவற்றைத்தான் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், பிறர் சொல்வதை கவனிக்கும்போது புதியனவற்றை கொஞ்சமாவது நீங்கள் கற்றுக்கொள்ளலாம். - தலாய் லாமா, திபெத் நாட்டின் பவுத்த துறவி.
Education is the most powerful weapon which you can use to change the world. - Nelson Mandela, South African anti-apartheid revolutionary, former President of South Africa.
மிகவும் ஆற்றல் வாய்ந்த ஆயுதம் கல்வி. உலகை மாற்ற நீங்கள் அதை பயன்படுத்தலாம் - நெல்சன் மண்டேலா, நிறவெறிக்கு எதிராகப் போராடிய தென் ஆப்பிரிக்கப் புரட்சியாளர், தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர்.

அறிந்ததும் அறியாததும்

A, An ஆகிய articles-ஐ எங்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
ஆனால், எங்கெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்பது தெரியுமா மாணவர்களே!
பன்மையை குறிக்கும் சொற்களுக்கு முன்னால் ஒருபோதும் A, An என்று எழுதக் கூடாது.
உதாரணத்துக்கு, A dresses, a girls, a radios, an apples, an oranges - ஆகியவை முற்றிலும் தவறு
A என்பதை ஒருமைப் பெயர்ச்சொல்லுக்கு (Singular Noun) முன்னால் மட்டுமே எழுத வேண்டும். அவ்வாறு எழுதும்போது வேறொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுதான் Consonants.
b, c, d, f, g, h, j, k, l, m, n, p, q, r, s, t, v, w, x, y, z – இவைதான் Consonants
இந்த Consonants-உடன் தொடங்கும் ஒருமை பெயர்ச்சொல்லுக்கு முன்பு மட்டுமே A எழுத வேண்டும்.

FOLLOW US

WRITE A COMMENT

x