Saturn beats Jupiter after the discovery of 20 new moons
Washington
Researchers have found 20 new moons orbiting Saturn, increasing its tally of moons to 82, surpassing Jupiter's 79 an advance that may shed more light on the origin and evolution of the ringed planet. According to the researchers, including those from Carnegie Institution for Science in the US, the newly discovered moons were about five kilometers in diameter, with seventeen of the moons orbiting the planet backwards in a direction opposite to that of Saturn's rotation around its axis.
The other three moons orbited in the same direction as Saturn's rotation in what is called prograde motion. Two of the prograde moons are closer to Saturn.
"Studying the orbits of these moons can reveal their origins, as well as information about the conditions surrounding Saturn at the time of its formation," said Scott S. Sheppard of Carnegie Institution for Science, who lead the discovering team.
மொழிபெயர்ப்பு
20 புதிய நிலவுகள் மூலம் வியாழனை முந்தியது சனி
வாஷிங்டன்
விண்வெளியில் உள்ள சனிக் கோளின் வட்டப் பாதையில் புதிதாக 20 நிலவுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மொத்தம் 82 நிலவுகள் சனிக் கோளில் உள்ளதாக இதன்மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 79 நிலவுகளை கொண்ட கோள் வியாழன். ஆகவே புதிய நிலவுகள் மூலமாக வியாழனை சனி முந்தியிருக்கிறது. வளையம் கொண்ட கோள்களின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து அடுத்த கட்ட ஆய்வுகள் நடைபெறுவதற்கான சூழல் இந்த ஆராய்ச்சி மூலம் கிடைத்துள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலவுகள் அனைத்தும் 5 கிலோ மீட்டர் விட்டம் உடையவை என்றும், மொத்தமுள்ள 20 நிலவுகளில் 17 சனிக் கோளின் சுழற்சிக்கு நேரெதிர் திசையில் சுழன்றுகொண்டிருக்கின்றன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவைச் சேர்ந்த கார்னேஜி அறிவியல் நிறுவனம் உட்பட பல விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மீதமுள்ள 3 நிலவுகள் சனிக் கோள் சுழலும் திசையிலேயே சுழன்றுகொண்டிருக்கின்றன. இவற்றில் 2 சனிக்கோளுக்கு நெருக்கமாக உள்ளன.
“புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலவுகளின் வட்டப்பாதையை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் அவற்றின் தோற்றத்தை கண்டறிய முடியும். அதுமட்டுமின்றி சனிக்கோள் உருவான காலத்தில் எத்தகைய சூழ்நிலை நிலவியது என்பது குறித்த தகவல்களையும் சேகரிக்க முடியும்” என்றார் கார்னேஜி அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான ஸ்காட் ஷெப்பர்ட்.
WRITE A COMMENT