உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள், கல்வியாளர்களின் பொன்மொழிகளைத் தமிழில் தெரிந்துகொள்வோமா மாணவர்களே!
“You are today where your thoughts have brought you. You will be tomorrow where your thoughts take you” - James Allen
“உங்களுடைய சிந்தனை உங்களை எங்கே அழைத்துவந்திருக்கிறதோ அங்கேதான் இன்று நீங்கள் இருக்கிறீர்கள். நாளை உங்களுடைய சிந்தனை எங்கே உங்களைக் கொண்டு செல்லுமோ அங்கு நீங்கள் நாளை இருப்பீர்கள்” - ஜேம்ஸ் ஆலன், பிரிட்டிஷ் தத்துவ அறிஞர்.
“When one door closes, another opens; but we often look so long and so regretfully upon the closed door that we do not see the one which has opened for us” - Alexander Graham Bell
“ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும். ஆனால், பெரும்பாலான நேரம் மூடப்பட்டிருக்கும் கதவை மட்டுமே பார்த்து வருந்தி ஏங்கிப் போகிறோம். மறுபுறம் திறந்திருக்கும் கதவை நாம் பார்ப்பதே இல்லை” - அலெக்சாண்டர் கிரகாம் பெல், தொலைப்பேசியைக் கண்டுபிடித்தவர்.
ஒரு தோட்டக்காரர்
அன்பு மாணவர்களே, ஆங்கில மொழியில் எழுதும்போது, அடிக்கடி ஏற்படும் குழப்பங்களில் ஒன்று, எப்போது A, An பயன்படுத்துவது, எப்போது The பயன்படுத்துவது என்பதாகும். Vowels எனப்படும் A, E, I, O, U ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் சொற்களுக்கு முன்பு An எழுதவேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், எப்போதெல்லாம் the எழுதுவது என்பது உங்களுக்குத் தெரியுமா?
அதற்கு முன்னதாக A, An மற்றும் The-க்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டால் இது எளிது...
A, An ஆகிய இரண்டும் ‘indefinite articles’ என்று அழைக்கப்படுகின்றன. ஏனென்றால் அவை ஒரு குறிப்பிட்ட நபரையோ, பொருளையோ உணர்த்துவதில்லை.
உதாரணத்துக்கு, A gardener; அதாவது எந்த தோட்டக்காரராகவும் இருக்கலாம். The என்பது ‘definite article’ என்று அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபரையோ பொருளையோ குறிப்பதாகும். உதாரணத்துக்கு, The gardener who works in our neighbourhood park is a nice person. மேலே கொடுக்கப்பட்டிருக்கும் வாக்கியத்தில் குறிப்பிட்ட தோட்டக்காரரைப் பற்றி பேசுகிறோம். ஆகவே அங்கு the பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
WRITE A COMMENT