ஆங்கிலம் அறிவோம்


ஆங்கிலம் அறிவோம்

பழமொழிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும்..

அன்பான மாணவர்களே...
நம் அன்றாட வாழ்க்கையில் பழமொழிகளை மேற்கோள் காட்டி பேசுபவர்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் தமிழில் சொல்லப்படும் பழமொழிகளில் சிலவற்றை, ஆங்கிலத்தில் எப்படி சொல்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
(The face is the index of the mind)

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
(Great engines turn on small pivots)

அஞ்சில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
(A young twig is easier twisted than an old tree)

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
(Too much of anything is good for nothing)

அடங்காத மாடுக்கு அரசன் மூங்கில் தடி
அடியாத மாடு படியாது
(Restive horses must be roughly dealt with)

அடாது செய்பவர் படாது படுவர்
(Do evil and look for like)

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவார்கள்
(Spare the rod and spoil the child)

ஆனைக்கும் பானைக்கும் சரி
(Tit for tat)

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
(Little strokes fell great oaks)


ஆங்கிலத்தில் பெரிய எழுத்து
ஆங்கிலத்தில் உரித்தான ஓர் பெயர்ச்சொல் ஒரு வாக்கியத்தில் எங்கு இடம்பெற்றாலும் அல்லது தனிச் சொல்லாக எழுதப்பட்டாலும் அச்சொல்லின் முதல் எழுத்தை பெரிய எழுத்தாகவே (CAPITAL LETTER) எழுத வேண்டும்.

'India' எனும் சொல் உரித்தான பெயர்ச்சொல். ஒவ்வொரு தனி மனிதனின் பெயரும் உரித்தான பெயர்சொல் ஆகும். (Kalam, Sivan, Mathew.) நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகளின் பெயர்கள். (All India Radio, The Hindu.)

நாடுகள், மாவட்டங்கள், நகரங்கள், ஊர்கள், மொழிகள். (India, Sri Lanka,Tamil Nadu, Chennai, Tamil, English, Tamil) மேலும், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், முக்கிய கட்டிடங்கள் மற்றும் ஓர் அறையின் பெயர், மாதம், கிழமை, நாள், விடுமுறை தினம், முக்கிய நாட்கள் ஆகியவற்றையும் மதங்கள், மத நூல்களின் பெயர்களையும் ஆங்கிலத்தில் முதல் எழுத்தை பெரிய எழுத்தாக எழுத வேண்டும்.

FOLLOW US

WRITE A COMMENT

x