Last Updated : 23 Sep, 2025 07:55 AM

 

Published : 23 Sep 2025 07:55 AM
Last Updated : 23 Sep 2025 07:55 AM

இறுகப்பற்று என்பதன் மொழிபெயர்ப்பு? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 150

இரு இதழ்களுக்கு முன் வெளியான போட்டியின் விடைகள்

1. Everywhere always (10) - எங்கேயும் எப்போதும்
2. Wage war (6) - யுத்தம் செய்
3. Money for courage (8) - தில்லுக்கு துட்டு
4. Commander (4) - தளபதி
5. An immortal person (4) - அமரன்
6. Paternal grandmother (5) - அப்பத்தா
7 Hold tight (7) – இறுகப்பற்று
8. Masculine gender of lady (6) - ஜென்டில்மேன்
9. Break all barriers (8) - தடையறத் தாக்கு
10. Playground (5) – ஆடுகளம்

வழக்கம்போல ஏராளமானோர் விடைகளை அனுப்பியிருந்தனர். நன்றி.

தர்க்கரீதியாக சரியான விடைகள் என்றாலும் ஐந்தாவது கேள்விக்கான விடையாக எழுதப்பட்ட ‘ஹனுமான்’ என்பதையும் (விடை தமிழ்த் திரைப்படமாக இருக்க வேண்டும் என்பதால்), பத்தாவது கேள்விக்கு விடையாக அனுப்பப்பட்ட ‘மைதானம்’ என்பதையும் (ஐந்து எழுத்துகள் கொண்ட விடை என்று குறிக்கப்பட்டதால்) ஏற்க முடியவில்லை.

முதலில் வந்து சேர்ந்த சரியான விடைகளை எழுதியவர்கள்

1. சுகுமார் ஜெயவேல், தமிழ்நாடு அரசின் ஓய்வூதியர், தருமபுரி.
2. நம்பி ஆ​ரூரன், ஓய்வு பெற்ற தொழில் வல்லுநர், சென்னை.
3. என்.தேவிகுமாரி, கணினி நிரலாளர், சென்னை.
4. ஆர். ரஜினி பெலுவா ஷோபிகா, உதவிப் பேராசிரியை (ஆங்கிலம்), மதுரை.
5. ஹரிணி லக்ஷ்மணன், கல்லூரி மாணவி, திருச்சி.
6. ஆர்.தனலட்சுமி, முதுகலை உதவி யாளர், அரசு மேல்நிலைப் பள்ளி, இளையரசனேந்தல், தென்காசி.
7. காயத்ரி, நிலமங்கை நகர், சென்னை.
8. முருகதாஸ்.வி, ஆசிரியர், சேத்துப்பட்டு.

போட்டி வெளியானவுடன், அதன் முதல் கேள்வியில் இடம்பெற்ற Everywhere எனும் சொல்லைக் குறிப்பிட்டு, அதற்கும் Anywhere என்கிற சொல்லுக்கும் உள்ள வேறுபாடு என்ன எனக் கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.

Anywhere என்றால் எங்காவது எனக் கொள்ளலாம். Please sit anywhere. Everywhere என்றால் எங்கும். Books were everywhere in the library. சிலநேரம் anywhere எனும் சொல், எங்கும் என்கிற பொருளையும் தரும். I do not find him anywhere. இதே கேள்வியில் இடம்பெற்ற always என்பதற்கும் all ways என்பதற்கும் உள்ள வேறுபாட்டையும் தெரிந்து கொள்ளலாமே.

எப்போதும் என்பது always. (இந்த சொல்லில் ஒரு L மட்டுமே இடம்பெறுகிறது என்பதைக் கவனியுங்கள்). இரண்டு சொற்களாக அமைந்துள்ள All ways என்பதன் அர்த்தம் எல்லா வழிகளிலும். He tried all ways to solve the problem. இதன்பொருள், “அவன் எல்லா வழிகளிலும் அந்த பிரச்சினையைத் தீர்க்க முயன்றான்”.He tried always to solve the problem. இதன் பொருள் “அவன் எப்போதுமே பிரச்சினைகளைத் தீர்க்க முய​ற்சிப்பது வழக்கம்”.

Wage என்பதைக் கூலி அல்லது சம்பளம் என்று மட்டுமே எண்ணிக் கொண்டதால் wage war எனக் கொடுக்கப்பட்டுள்ள இரண்டாவது கேள்விக்கான பதிலில் கணிசமானவர்கள் தவறு செய்திருக்கிறார்கள்.

Wage என்கிற சொல் verb ஆகப் பயன்படும்போது, அது பெரும்பாலும் போர் தொடர்பானதாக இருக்கும். Waging war என்றால் போர் தொடுப்பது. அதாவது யுத்தம் செய்வது. சிலநேரம் மட்டும் ராணுவம் தொடர்பாக இல்லாமலும் இந்தச் சொல் verb ஆகப் பயன்படுவது உண்டு. The family is waging a battle against poverty.

இறுகப்பற்று என்பதன் மொழிபெயர்ப்பு hold tight என்பதா அல்லது hold tightly என்பதா எனவும் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இரண்டும் சரி. The bus is moving – hold tight!To avoid fall, he held the handle tightly.

(நிறைவுற்றது)

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x