Published : 16 Sep 2025 07:27 AM
Last Updated : 16 Sep 2025 07:27 AM
கேட்டாரே ஒரு கேள்வி
ஒருவருடைய குழந்தையைக் குறிப்பிட offspring என்கிறார்கள். Spring என்பது வசந்தக் காலத்தைக் குறிக்கிறது. குழந்தைப் பிறந்தவுடன் ஒருவரின் உற்சாக ஸ்விட்ச் off ஆகிவிடுமா என்ன?
Off என்றால் நிறுத்தப்படுதல் (Switch off the light) என்பது மட்டுமல்ல. ஒன்றிலிருந்து விலகிச் சென்றது அல்லது புறப்பட்டது எனும் பொருளும் அதற்கு உண்டு. (He walked off the main road. The plane took off) Off என்பதற்கு from என்றும் பொருள் உண்டு. Take your feet off the chair. The thieves jumped off the wall. இந்தப் பொருளில்தான் offspring என்பதில் உள்ள off பயன்படுத்தப்பட்டுள்ளது.
Spring என்பது ஒன்றிலிருந்து உருவாவது என்பதாக இங்குப் பயன்படுத்தப்படுகிறது. That which springs from (parents) என்கிற பொருளில் குழந்தையைக் குறிக்கும் சொல் offspring. விலங்கு களிலும் offsprings உண்டு. The bird fed its offspring.
I have been searching for my pen. The police inspector searched his house. முதல் வாக்கியத்தில் இருக்கும் for எனும் சொல் இரண்டாவது வாக்கியத்தில் ஏன் இல்லை?
அது ‘ஒன்றை’த் தேடுவதற்கும் ‘ஒன்றில்’ தேடுவதற்கும் உள்ள வேறுபாடு. பேனாவில் பட்டன் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய பேனாவைத் (திறந்து) தேடும்போது I have been searching my pen எனலாம். பல வீடுகளுக்கு மத்தியில் குறிப்பிட்ட வீட்டை காவல்துறை ஆய்வாளர் தேடினால் அப்போது The police inspector searched for the house என்பீர்கள்.
Envy, jealousy ஆகிய இரண்டும் பொறாமையைக் குறிக்கும் சொற்கள்தானே?
வேறுபாடு உண்டு. Envy என்பது பொறாமை. அதாவது, உங்களிடம் இல்லாத ஒன்று வேறொருவரிடம் இருக்கிறது. அதை நீங்கள் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். இது envy. I envy his high salary. Jealousy என்பது ஒருவித பாது காப்பற்ற தன்மை. அதாவது நம்மிடம் உள்ள ஒன்றை இழந்து விடுவோமா எனும் அச்சம்.
Grassroots சொல் எதைக் குறிக்கிறது?
அடித்தட்டு மக்களை, அடிப்படை நிலையை. Politicians try to win the elections by focussing on grassroots. Reforms must start at the grassroots level. Grass குறித்த idiom ஒன்றையும் அறிந்துகொள்ளலாமே. To let the grass grow under one's feet என்றால், காலாகாலத்தில் ஒன்றைச் செய்யாமல் இருப்பது. அதனால், அரிய வாய்ப்புகளைக் கோட்டைவிடுவது.
சிப்ஸ்
Tumultuous situation என்பது? - இரைச்சலான, அமளியான சூழல்.
மிக அழகான, மிக நுணுக்கமான என்கிற இரண்டையும் இணைத்து எந்த ஒரே ஆங்கிலச் சொல்லால் குறிப்பிடலாம்? - Exquisite.
Alienஐ எப்படி உச்சரிப்பது? - வெளிகிரகவாசியைக் குறிக்கும் (சில நேரம் வெளிநாட்டவரையும்) இந்தச் சொல்லை ‘ஏலியன்’ என்று உச்சரிக்க வேண்டும்.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT