Last Updated : 09 Sep, 2025 06:49 AM

 

Published : 09 Sep 2025 06:49 AM
Last Updated : 09 Sep 2025 06:49 AM

அதென்ன ‘Retro’? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 148

சொல்லவே நாக்கூசும் குற்றம் செய்பவர்களை pidiphile என்றழைக்கக் காரணம்? - பலரும் தவறாக எழுதும் இந்தச் சொல்லின் சரியான எழுத்துக்கள் Pedophile. பருவம் அடையாத குழந்தைகளிடம் பாலின ஈர்ப்பு கொள்பவரை இந்தச் சொல் குறிக்கிறது. கிரேக்கச் சொல் pais என்பதற்குப் பொருள் குழந்தை. Phile என்றால் ஒன்றின் மீது ஈர்ப்புகொண்டவர். இரண்டின் இணைப்புதான் pedophile. குழந்தை நல மருத்துவம் Pediatrics என அழைக்கப்படுவதும் இதனால்தான். Pediatrician என்பவர் குழந்தை நல மருத்துவர்.

Monument, manuscript ஆகிய இரண்டும் தொடர்புள்ள சொற்களா? - Monument என்பது கட்டடம், சிலை, கோட்டை, அரண்மனை போன்றவற்றைக் குறிக்கிறது. முப்பரிமாணம் கொண்டது. ஒரு மனிதர் அல்லது நிகழ்வு தொடர்பாக அது உருவாக்கப்பட்டிருக்கும். பண் பாட்டுக் குறியீடாக அது கருதப்படும்.

Manuscript என்பது ஒரு நூல் அல்லது ஓர் ஆவணம். பெரும்பாலும் கையினால் எழுதப்பட்டது. இதற்கென்று ஒரு வரலாறு அல்லது கலைத்தன்மை அல்லது அறிவியல் தொடர்பான மதிப்பு இருக்கும்.

Retro என்பதன் விரிவாக்கம் என்ன? - அது எந்த ஆங்கிலச் சொல்லின் சுருக்கமும் இல்லை. லத்தீன் மொழியில் retrospectus என்றால் திரும்பிப் பார்ப்பது அல்லது கடந்த காலம் தொடர்பானது. பழங்கால நாகரிகம், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட உடை போன்றவற்றை இப்போது பயன்படுத்தினால் அது retro. A retro dress என்றால் பழங்காலத்தில் பயன்படுத்திய உடையின் பாணியில் இப்போது வடிவமைக்கப்பட்ட உடை.

She knows the answer என்றுதான் எழுத வேண்டும். She is knowing the answer என்று எழுதக்கூடாது என்கிறார் ஆசிரியர். ஏன் என்று கேட்டால் அப்படித்தான் என்கிறார். அப்படித்தான்! Read, come, drive, sit, stand, write, jump, take போன்றவை action verbs. ஆனால் know, love, want, believe, understand போன்றவை action verbs அல்ல. அது ஒரு நிலை. எனவே, அவற்றை state verbs என்போம். -ing என்பது தற்காலிகமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தைக் குறிப்பது. He is reading. They are coming. She is driving.

மனநிலை என்பது தற்காலிகமானது அல்ல என்றே கருதுவதால் state verbs உடன் -ing சேர்ப்பதில்லை. அவற்றை present tenseஇல் மட்டுமே குறிப்பிடு கிறோம். I know her. We want coffee. We understand the subject.

போட்டி

தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றின் பெயர்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. திரைப்படங் களின் பெயர்களைக் கண்டுபிடித்து அனுப்புங்கள். அடைப்புக்குறிக்குள் காணப்படும் எண் அந்த தமிழ்த் திரைப்படத் தின் பெயரில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

1. Everywhere always (10)
2. Wage war (6)
3. Money for courage (8)
4. Commander (4)
5. An immortal person (4)
6. Paternal grandmother (5)
7. Hold tight (7)
8. Masculine gender of lady (6)
9. Break all barriers (8)
10. Playground (5)

சரியான விடைகளை எங்களுக்கு வந்து சேருமாறு மின்னஞ்சலில் அனுப்பும் முதல் ஐந்து வாசகர்களின் பெயர்கள் இந்தப் பகுதியில் பிரசுரிக்கப்படும். உங்கள் பெயர், நீங்கள் வசிக்கும் ஊர், உங்கள் பணி போன்ற விவரங்களும் தேவை.

சிப்ஸ்:

Please see your book. Please look your book. எது சரி? - Please look into your book.

Flora and fauna என்றால்? - ஒரு பகுதியில் காணப்படும் தாவரங்கள் மற்றும் உயிரினங்கள்.

Vixen என்பது? - பெண் நரி.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x