Published : 26 Aug 2025 07:24 AM
Last Updated : 26 Aug 2025 07:24 AM
Breath, breathe இரண்டையும் ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பயன்படுத்தலாமா? - உச்சரிப்பிலேயே இவை மாறுபடுகின்றன. Breath என்பதை பிரெத் என்றும் breathe என்பதை பிரீத் என்றும் உச்சரிக்க வேண்டும். Breath என்பது noun. இது சுவாசம் அல்லது மூச்சு என்பதைக் குறிக்கிறது. Take a deep breath. Breathe என்பது verb. She found it very difficult to breathe. இரண்டு சொற்களும் அடங்கிய சில வாக்கியங்களைப் படிக்கும்போது இது மேலும் தெளிவாக விளங்கும். He took a deep breath and began to breathe slowly. The trainer said, ‘Breathe deeply and then hold your breath for a few seconds’.
ஒரு வலைத்தொடரில் ‘When I hear something, you will hear’ என ஒருவர் கூறினார். இது அந்தக் கதாப்பாத்திரங்களின் கேட்கும் திறன் தொடர்பானதா? - இல்லை. ‘எனக்கு ஒரு விஷயம் தெரிய வரும்போது, அது குறித்து உனக்கும் நான் தெரிவிக்கிறேன்’ என்கிற பொருள் கொண்ட வாக்கியம் அது.
நான் கண்ட ஓடிடி திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவர் தனக்குக் கீழ் பணிபுரியும் ஒரு ஊழியரைப் பார்த்து ‘தாங்க்ஸ். யூ ஹாவ் காம்ப்ளிமென்ட்டெட் மி வெல்’ என்று கூறினார். ஆனால், அந்த ஊழியர் அதற்கு முன் அந்த இன்ஸ்பெக்டரை எதற்கும் பாராட்டியதாகத் தெரியவில்லை. பின் எப்படி? -
அந்த இன்ஸ்பெக்டர் கூறிய வாக்கியத்தில் உள்ள சொல் complimented அல்ல. அது complemented என்பதாக இருக்க வாய்ப்பு அதிகம்.
Compliment செய்வது என்பது நீங்கள் நினைப்பதுபோல பாராட்டுவதுதான். Complement என்பது ஒன்றுக்கு அனுசரணையாக இருந்து அதை உயர்த்துதல் அல்லது முழுமையடைய வைத்தல். Payasam is a perfect complement to the meal என்றால், பாயசமும் அளிக்கப்பட்டால் அது உணவு சாப்பிட்ட உணர்வை முழுமையாக்கும் என்று பொருள். Mouse is a complement to computer.
நீங்கள் கண்ட திரைப்படத்தில் வந்த இன்ஸ்பெக்டர் ஏதோ ஒரு செயலை செய்யும்போது, அவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர் அந்தச் செயலில் அவருக்கு ஏதோ முக்கியமான உதவியைச் செய்திருப்பார். அதற்காக ‘Thanks. You have complemented me well’ என்று அந்த இன்ஸ்பெக்டர் கூறி இருக்க வாய்ப்பு உண்டு. அடடா, ஓடிடியில் வெளியாகும் ஆங்கிலத் திரைப்படங்களும் வலைத்தொடர்களும் எப்படி எல்லாம் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள உதவுகின்றன!
Talkative என்றால் நன்கு பேசக்கூடிய என்று வைத்துக்கொள்ளலாமா? - அளவுக்கு அதிகமாக தொணதொணத்துக் கொண்டே இருப்பவர் என்கிற பொருளில்தான் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் சம வார்த்தைகளாக chattering, voluble, loquacious போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
கேட்டாரே ஒரு கேள்வி
தேவைப்படும் எந்த உதவியையும் செய்யாமல் கழுத்தறுக்கும் ஒருவரை எப்படி மூக்கறுப்பதுபோல், அதேநேரம் அநாகரிகச் சொற்கள் இல்லாமல், விமர்சிக்கலாம்?
Thanks for nothing என்று கூறலாம். இது உண்மையில் நன்றி கூறும் வாக்கியம் அல்ல. ‘நீ எந்த உதவியையும் செய்யவே இல்லை. எனவே, உன் மீது கோபமாக இருக்கிறேன்’ என்பதைக் குறிக்கிறது.
இதைப் பகிர்ந்துகொள்ளும்போது, ‘To the guy who invented zero, thanks for nothing’ எனும் வாக்கியம் நினைவுக்கு வருகிறது. இந்த சாமர்த்தியமான வாக்கியத்தில் thanks for nothing என்பது உண்மையில் பாராட்டின் வெளிப்பாடு. ஜீரோ என்பதை nothing என்றும் கூறலாம். இந்தப் பொருளில் ‘ஸீரோவைக் கண்டுபிடித்த நபருக்கு என் நன்றிகள்’ எனக் கூறப்பட்டிருக்கிறது.
சிப்ஸ்:
He removed his shades என்றால்? - அவர் தன் குளிர் கண்ணாடியைக் கழற்றினார்.
குடமுழுக்கு என்பதற்கு ஆங்கிலத்தில்? - Consecration.
Invitee என்பவர்? - யாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோ அவரே Invitee.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT