Last Updated : 05 Aug, 2025 07:29 AM

 

Published : 05 Aug 2025 07:29 AM
Last Updated : 05 Aug 2025 07:29 AM

‘Goose, Duck’ எனச் சொல்லி கேலி செய்வது ஏன்? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 143

e.g. என்பதற்கும் i.e. என்பதற்கும் ஒரே பொருளா? - இல்லை. இவற்றை ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பயன்படுத்த முடியாது. பலவற்றில் ஒன்றையோ அல்லது சிலவற்றையோ மட்டுமே குறிப்பிடும்போது e.g. என்பதைப் பயன்படுத்துவோம்.

‘எடுத்துக்காட்டாக’ என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். E.g. என்பது லத்தீன் மொழியில் (exempli gratia) for example என்பதைக் குறிக் கிறது. Certain animals give milk, e.g. cow, goat. அதுவே, i.e. என்பதன் பொருள் ‘that is’. ‘அதாவது’ என்று அர்த்தம். All customers will get the usual discount, i.e. 10 percent.

Stray என்பதன் பொருள் என்ன? - இருப்பிடம் இல்லாத (வீட்டில் வளர்க்கப் படாத) நாய், பூனை போன்றவற்றை strays எனக் குறிப்பிடுவதுண்டு. Stray என்பது verb ஆக பயன்படுத்தப் படும்போது அது இருக்க வேண்டிய இடத்தி லிருந்து தள்ளிச் செல்வதைக் குறிக்கும்.

The cow had strayed onto the road என்றால் அது இருக்க வேண்டிய புல்வெளியைத் தாண்டி வேறு இடத்துக்குச் செல்வதைக் குறிக்கிறது. Do not stray from the main topic.

Duck, goose இரண்டு பறவைகளின் பெயர்களும் எதிர்மறையாகப் பயன்படுத்தப் படுவது ஏன்? - முதலில் இந்த இரண்டு பறவைகளுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்வோம். Duck என்பது வாத்து. சிறிய உடல் கொண்டது. Gooseஐயும் வாத்து என்றுதான் தமிழில் குறிப்பிடுவது வழக்கம். ஆனால், Goose பெரிய உடலும் பெரிய இறக்கைகளும் கொண்டது. Gooseக்கு duckஐவிட நீண்ட கழுத்து.

இரண்டும் எழுப்பும் ஒலிகளை ஆங்கி லத்தில் இரண்டு விதமாகக் குறிப்பிடுவார்கள். Goose எழுப்பும் ஒலி honk. Duck எழுப்பும் ஒலி quack. Goose அதிக ஒலி எழுப்பும். நீரில் சீராகச் செல்லாமல் விசித்திரமான விதத்தில் செல்லும். அதனால்தானோ என்னவோ ‘ஒரு சரியான முட்டாள்’ என்பதைக் குறிக்க ‘Silly goose’ என்று செல்லமாகத் திட்டுவது உண்டு.

‘0’ என்ற எண் வாத்து முட்டை போலக் கொஞ்சம் ஓவல் வடிவ வட்டத்தில் இருக்கும். எனவே ரன் எதுவும் எடுக்காமல் பூஜ்ஜியத்துடன் வெளியேறும் பேட்ஸ் மேனின் ஸ்கோரை ‘டக் அவுட்’ எனக் குறிப்பிடு வதுண்டு.

Juggling என்பது கூட்ட நெரிசலில் சிக்கித் திணறுவதை உணர்த்துகிறதா? - இல்லை. அது வியக்க வைக்கும் வகையில் வித்தை காட்டுவதை உணர்த்துகிறது. ஒரே நேரத்தில் பல பொருள்களைக் காற்றில் தூக்கிப்போட்டு அவற்றை ஒரே நேரத்தில் பிடிப்பது போல. இப்படிச் செய்பவரை juggler என்பார்கள்.

கேட்டாரே ஒரு கேள்வி:

பனிக் கட்டியால் மூடப்பட்டிருப்பதால் Iceland. அதுபோல் பெரும் கோபமுடை யவர்கள் நிறைய இருப்பதால் Ireland எனப் பெயர் வைத்தார்களோ?

கிண்டல் கேள்வி என்பது புரிகிறது! Ire என்றால் கோபம் என்பது உண்மைதான். ஆனால், அந்த நாட்டின் புராணப்படி அவர்களது தெய்வம் Eriu. இதிலிருந்து மருவிதான் Ireland என்றானது. ஒரு தகவல். Iceland பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும் நாடு அல்ல. அதில் பசுமை நிறைய உண்டு.

சிப்ஸ்:

Gratitude என்பது பெருமையா? - நன்றி. (Gratitude கொண்டவர்கள் அதற்காகப் பெருமைப்படலாம்).

Back to square one என்றால்? - தொடங்கிய இடத்துக்கே வந்து சேருவது.

Venue என்பது இடத்தைக் குறிக்கும் சொல்லா? - ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காக மக்கள் கூடும் இடத்தைக் குறிக்கும் சொல்.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x