Last Updated : 22 Jul, 2025 07:44 AM

1  

Published : 22 Jul 2025 07:44 AM
Last Updated : 22 Jul 2025 07:44 AM

‘Had your meals’ என்பது சரியா? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 141

சாப்பிட்டு விட்டீர்களா என்பதை எப்படிக் கேட்பது Had your meal என்பது சரியா அல்லது Had your meals எனக் கேட்க வேண்டுமா? - Have you had you meal என்பதே சரி. பேச்சுவழக்கில் Had your meal? என சுருக்கியும் கேள்வி தொனியில் கேட்கப்படுகிறது. மற்றபடி meals என்பது பன்மை.

Found missing என்பது மிக வேடிக்கையாக இருக்கிறதே! - ஆமாம். It is seriously funny. இது Open secret என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இப்படி நேர் எதிரான அர்த்தங்கள் கொண்ட இரு வார்த்தைகள் இணைப்பை oxymoron என்பார்கள்.

ஒரு கட்சியின் பெயரைக் குறிப்பிட்டு அதன் functionary கைது செய்யப்பட்டார் எனச் செய்தி வெளிவந்திருந்தது. Functionary என்பது யாரைக் குறிக்கிறது? - அந்தக் கட்சியின் அலுவலகப் பணிகளைச் செய்பவர் அல்லது மேற்பார்வை இடுபவர்.

எனக்குப் பிடித்த ‘ஓராாயிரம் பார்வையிலே’ பாடலில் காலடி ஓசை என்ற சொல் இடம் பெறுகிறது. இந்தச் சொல்லை sound of leg என்பதாக அல்லாமல் வேறெப்படி கூறலாம்? - கடைக்கு அல்லது வணிகக் களத்துக்கு வந்தவர்களின் எண்ணிக்கையைக் குறிக்க footfall எனும் சொல் பயன்படுகிறது என்பதை இந்தப் பகுதியில் முன்பு தெரிவித்திருந்தேன். காலடி ஓசை என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லும் அதுதான். Footfalls. (நடக்கும்போது ஓசை எழுப்புவது மொத்த காலும் அல்ல. பாதம்தான்! எனவே leg என்ற பயன்பாடு தேவையற்றது).

‘கைவளை’ அல்லது ‘சுற்றுப்பட்டை’ என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடலாம்? - சட்டையின் கைமுனையில் மடிக்கப் பட்டிருக்கும் பகுதியைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். அதை cuff என்பார்கள். பேண்ட்டின் கால் பகுதியின்கீழ் மடிக்கப் பட்டிருக்கும் பகுதியையும் அப்படித்தான் குறிப்பிடுவார்கள்.

இரு வாரங்களுக்கு முன்பு அறிவித்த போட்டிக்கான விடைகள்

1.C-HEN-nai (கோழி)
2.C-HAND-igar (கை)
3.Luck-NOW (இப்போது)
4.S-HILL-ONG (குன்று)
5.PAN-aji (இந்திய வருமான வரித் துறை வழங்கும் 10 இலக்க எண்ணெழுத்து குறியீடு)
6.B-HOP-al (குதிப்பது)
7.Bhu-BAN-eshwar (தடை செய்வது)
8.Sri Vijayapu-RAM (ஆட்டுக்கடா)

(அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரின் பெயர் போர்ட் ப்ளேர் என்பதிலிருந்து  விஜயபுரம் என்று மாற்றப்பட்டுள்ளது). கீழே உள்ளவர்களில் தருமபுரி வாசகர் மட்டுமே நாம் நினைத்திருந்த மேற்படி விடையை அளித்ததுடன், கூடவே ‘எடுத்துக்காட்டில் திருவனந்தபுரம் குறிப்பிடப்பட்டு விட்டதால் அதை விடுத்து  விஜயபுரம் என்பதை எழுதியதாகக்’ குறிப்பிட்டுள்ளார். ஆனால், ThiruvananthapuRAM என்கிற மாற்று விடையைப் பலரும் தேர்ந்தெடுத்து விட்டதை ஏற்கத்தானே வேண்டும்.

உற்சாகம் அளிக்கும் வகையில் மிக அதிகமான வாசகர்கள் போட்டியில் பங்கேற்றனர். போட்டி அறிவிக்கப்பட்ட முதல் நாளன்றே முழுவதும் சரியான விடைகளை அனுப்பியவர்களின் எண்ணிக்கை மட்டுமே சதத்தைத் தாண்டிவிட்டது. இவர்களில் பள்ளி மாணவர், ஐ.டி.ஊழியர், கல்லூரி மாணவர், பேராசிரியர், வெல்டர், ஓட்டுநர், இல்லத்தரசி, ஓய்வு பெற்ற அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் என பல தரப்பட்டவர்களும் கலந்து கொண்டது ‘ஆங்கிலம் அறிவோமே’ பகுதிக்குப் பெருமை மற்றும் பெரும் பலம்.

முழுவதும் சரியான விடைகளை முதலில் அனுப்பியவர்கள்.

1. ஹரிணி லட்சுமணன், திருச்சி
2. எம். ரவி பாலாஜி
3. சுகுமார் ஜெயவேல், தருமபுரி
4. செல்வி ஆர். திருச்சி
5. நரேந்திரன்
6. ஸ்வர்ணா எஸ். திருநெல்வேலி
7. எஸ். ஹேமலதா, கினர்மா கிராமம், திருவண்ணாமலை மாவட்டம்
8. பி.எஸ்.அப்துல் காதர், கடையநல்லூர்
9. தீட்சிதா தேசிங்குராஜன்
10. மோனிஷா கே. உடுமலை

சிப்ஸ்

7th July, 2025, July 7th, 2025 எது சரி? - 7th July,2025 அல்லது July 7, 2025

மலர்கள் வாடி விடுவதை எந்த ஆங்கிலச் சொல்லால் குறிக்கலாம்? - Wilt

Lend, give ஆகிய இரு வார்த்தைகளும் ஒரே பொருள் கொண்டவையா? - Lend என்பது தற்காலிகமாக மட்டுமே ஒன்றை அளிப்பது. அதாவது அதைத் திருப்பித் தந்துவிட வேண்டும்.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x