Published : 24 Jun 2025 07:34 AM
Last Updated : 24 Jun 2025 07:34 AM
Boost, booster dose என்ன தொடர்பு? - Boost என்றால் ஊக்கம் அல்லது எதையாவது மேம்படுத்தும் செயல். His talk boosts our confidence என்றால் ஏற்கெனவே நமக்கு இருக்கும் நம்பிக்கையை அவரது பேச்சு மேம்படுத்துகிறது என்கிற பொருள். ஏற்கெனவே ஒரு நோய்க்கான தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொண்டு விட்டோம். இந்நிலையில் அதற்கான Booster dose என்பதைப் போட்டுக் கொண்டால் ஏற்கெனவே நம் உடலிலுள்ள அந்த நோய்க்கெதிரான தடுப்பு சக்தி மேலும் மேம்படும் எனப் பொருள்.
Stranded என்பது கூட்டத்தில் இருப்பதைக் குறிக்கிறதா? - கூட்டத்தில் இருப்பதை அல்ல. கூட்டத்தில் சிக்கிக் கொண்டதை அது உணர்த்துகிறது. விடுபட்டு வர முடியாத ஓரிடத்தில் சிக்கிக்கொள்வது. வண்டியில் செல்லும்போது முன்புறம் நிறைய வண்டிகள், அதேநேரம் பின்புறமாக நம் திருப்பி வேறு பாதைக்கும் செல்ல முடியாத அளவுக்குப் பின்புறமும் வண்டிகள். இந்த நிலையை விளக்கவும் stranded என்கிற சொல் பயன்படும்.
He categorically denied என்பது எதைக் குறிக்கிறது? - நீங்கள் லஞ்சம் வாங்கியதாக ஒருவர் குற்றம் சாட்டுகிறார். அப்போது நீங்கள், “நான் லஞ்சம் வாங்கியதாக நினைவில்லை” என்று கூறினால் அது தெளிவான மறுப்பு இல்லை. மாறாக, “நான் ஒருபோதும் லஞ்சம் வாங்கவில்லை” என்பது முழுமையான, தெளிவான மறுப்பு. இந்த இரண்டாவது வகை மறுப்புதான் categorical denial.
Negligible என்றால் என்ன? - மிகக் குறைவு. முக்கியமென்று கருதமுடியாதது. ஒன்று negligible ஆக இருக்கும்போது அது அலட்சியப்படுத்தப்படும். புறக்கணிக்கப்படும்.
போட்டியில் கேட்டுவிட்டால் கீழே உள்ள வாக்கியங்களில் எது சரி?
(1) The Ganges is longest river in india.
(2) The Ganges is one of longest river in india.
(3) The Ganges is one of the longest river in india.
(4) The Ganges is the longest rivers in india.
(5) The Ganges is the longest river in India.
Superlative adjective சொற்களுக்கு முன் the என்கிற சொல்லைச் சேர்த்தாக வேண்டும். The best, the tallest, the shortest, the smallest, the highest என்பதுபோல. எனவே முதல் இரண்டு வாக்கியங்கள் தவறானவை. One of the என்பதைத் தொடர்வது பன்மைச் சொல்லாகத்தான் இருக்க வேண்டும். One of the students, one of the women என்பது போல. எனவே மூன்றாவது வாக்கியமும் தவறு.
நான்காவது வாக்கியம் The Ganges is என்று ஒருமையில் தொடங்குகிறது. ஆனால், longest rivers என்று பன்மையில் தொடர்கிறது. இதுவும் தவறு.
The Ganges is the longest river in India என்கிற ஐந்தாவது வாக்கியம் மட்டுமே சரி. கூடுதலாக ஒரு தகவல். இந்தியாவுக்குள் பாயும் நதிகளில் கங்கைதான் மிக நீளமானது. அதுவே, இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பாயும் நதிகளின் நீளத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் நீளமானவை சிந்து, பிரம்மபுத்ரா.
சிப்ஸ்:
போர்வீரர்கள் யுத்தத்தில் பாதுகாப்புக்காக அணிந்துகொண்ட உலோகத்தாலான கவசத்தை ஆங்கிலத்தில் எப்படிக் கூறலாம்? - Armour
பொடீக் என்பது என்ன? - Boutique என்பது ஒரு சிறிய கடை. அதில் நவீன உடைகளையோ, விலை உயர்ந்த பரிசுப் பொருள்களையோ விற்பார்கள்.
பொய்யான குற்றச்சாட்டு என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடலாம்? - Fake allegation.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT