Published : 17 Jun 2025 07:34 AM
Last Updated : 17 Jun 2025 07:34 AM
பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜி.பரமசிவம் என்கிற வாசகரின் விடைதான் முதன்முதலாக வந்து சேர்ந்தது. Break என்பதை நிறுத்து என்று ஏற்றுக்கொள்ளத் தயக்கமாக இருந்தாலும், இணைப்புச் சொல்லாக இவர் குறிப்பிட்டுள்ள Firebreak என்பது ஓகேதான்.
விடை ஒரே ஆங்கிலச் சொல்லாக இருக்கவேண்டும் என்பதைப் பலர் மீறி இருக்கிறார்கள். அல்லது வகுப்பு ஆகியவற்றை இணைத்து optional class என்பது அப்படிப்பட்டதுதான். அமெரிக்காவிலுள்ள ஃபீனிக்ஸ் பகுதியிலிருந்து வாசகர் இ. ராமநாதன் நிறுத்து, அறை ஆகியவற்றை இணைத்து restroom என எழுதியிருப்பது சுவாரசியம்.
Ceasefire என்கிற சொல் ஒரு விடையாக அமைந்துள்ளது. இந்தச் சொல் எப்படி அறிமுகமானது? - ஃபிரெஞ்சு மொழியில் cessare என்றால் நிறுத்துவது என்று பொருள். Fire என்பது நெருப்பு. என்றாலும் இங்கே அது துப்பாக்கி சுடுதலைக் (gunfire) குறிக்கிறது. துப்பாக்கி சுடுதலை நிறுத்துவது மட்டுமின்றி Ceasefire என்பது தாக்குதலை நிறுத்துவது என்கிற பொதுவான பொருளில் பயன்படுகிறது. போர்நிறுத்தம். இது பெரும்பாலும் தற்காலிகமானது. இதைத் தொடர்ந்து பின்னர் அமைதி ஒப்பந்தம் உண்டாகும்போதுதான் (அதைச் செயல் படுத்தும்போதுதான்) அமைதி நிலவும்.
Ceasefire என்கிற சொல் 20ஆம் நூற்றாண்டில் குறிப்பாக முதலாம் உலகப் போரில்தான் அறிமுகமானது. இரண்டாம் உலகப் போரின்போது தூதரக அலுவலகங்களில் இது அதிகாரப்பூர்வமாக இடம் பிடித்தது. Ceasefire அறிமுகமாவதற்கு முன் truce, armistice போன்ற சொற்கள் இந்தப் பொருளில் பயன்பட்டுவந்தன.
Firebreak என்று அனுப்பப்பட்டிருக்கும் சொல்லின் பொருளைப் பார்ப்போம். அடர்ந்த தாவரங்கள், பசுமையான விளைச்சலுக்கு நடுவே ஒரு நீளமான துண்டுப் பகுதியில் உள்ள மரங்கள், புதர்களை வெட்டியோ எரித்தோ அந்தப் பகுதியைக் காலியாக வைப்பார்கள். Firebreak எனப்படும் அந்தப் பகுதி அந்த இடத்தில் தீவிபத்து உண்டாகும்போது அது பரவாமல் பாதுகாக்கிறது.
குல்லாய், அளவு ஆகியவற்றுக்கு மிக நேரடியான ஆங்கில சொற்களான cap, size ஆகியவற்றை இணைத்தால் கிடைக்கும் capsize என்கிற சொல்லை மிகக் குறைவானவர்களே கண்டுபிடித்திருந்தனர். அந்தச் சொல் குறித்துத் தெரிந்து கொள்வோம்.
Capsize என்றால் நீரில் கவிழச் செய்வது. இதைச் செய்தது பெரும் புயல் காற்றாக இருக்கலாம், பிரம்மாண்ட அலைகளாக இருக்கலாம். அல்லது அதன் உள்ளே அதிக எடையை ஒரே பக்கத்தில் வைத்திருந்தது காரணமாக இருக்கலாம்.
A big wave capsized the boat. When the ship capsized, we were trapped underneath it. தலைகீழாக ஒன்றைத் திருப்புவது என்பதையும் இந்தச் சொல் குறிக்கிறது. With a strong kick, the stool was capsized.
சிப்ஸ்:
Rift என்றால்? - பிளவு.
10 injured, 3 critical என்பதில் critical என்பது எதைக் குறிக்கிறது? - 10 பேருக்குக் காயம், மூன்று பேரின் நிலை ஆபத்து (உயிருக்குப் போராடுகிறார்கள்).
Drown (மூழ்குதல்) என்பதின் இறந்தகால வடிவும் drone என்பதா? - இல்லை. Drowned.
போட்டி - விடைகள்
இரு வாரங்களுக்கு முன் அறிவித் திருந்த போட்டிக்கு ஏராளமான விடைகள் வந்திருந்தன. முதலில் கேள்விகளுக்கான விடைகளைக் கீழே காணலாம்.
1. பிறகு, மதியம் afternoon
2. குல்லாய், அளவு capsize
3. நிறுத்து, நெருப்பு ceasefire
4. குட்டையான, கை shorthand
5. வகுப்பு, அறை classroom
6. அட்ஜஸ்ட் செய்து கொள்ளுதல், அல்லது adaptor
அனைத்து வார்த்தைகளையும் சரியாகக் கண்டுபிடித்தவர்கள்.
1. கே.சந்திரசேகரன், மதனந்தபுரம், சென்னை.
2. கீதா, பெங்களூரு.
3. பிரேமா நாராயணன், சென்னை.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT