Published : 08 Apr 2025 06:49 AM
Last Updated : 08 Apr 2025 06:49 AM
நான் படித்த புதினம் ஒன்றில் ஒரு பெண்மணி ‘I am a back number’ என்று கூறுகிறார். அப்படியானால் அவர் பள்ளியில் கடைசி பெஞ்சில் உட்காருபவர் என்றோ, போதிய ராங்க் வாங்காதவர் என்றோ அர்த்தமா?
ஒரு நாளிதழில் அல்லது பருவ இதழின் முந்தைய பிரதிகளை back numbers என்று கூறுவதுண்டு. விளையாட்டுப் பிரிவில் விளையாட்டு வீரர் அணிந்திருக்கும் சட்டையின் பின்புறம் உள்ள எண்ணை back number என்பதுண்டு.
அதுவே குறிப்பிட்ட நபரை இப்படிக் குறிப்பிட்டால் அதன் பொருள் வேறு. இனியும் பயன் இல்லாத ஒருவரை அல்லது இனியும் வெற்றி பெற முடியாத ஒருவரை back number என்று கூறுவதுண்டு. Even at the age of 65, she is not a back number.
Killing, Neutralizing ஆகிய இரண்டும் ஒரே பொருள் கொண்டவையா? - எந்த அர்த்தத்தில் நீங்கள் கூறுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. Killing என்பது நேரடியாக ஒருவரை அல்லது ஒன்றைக் கொல்வது.
Neutralizing என்பது ஒருவரையோ ஒன்றையோ செயலிழக்க வைப்பது. ராணுவத்தைப் பொறுத்தவரை neutralizing என்பது killingதான். மற்றபடி கண்ணீர்ப் புகைக் குண்டு வீசுவது, விலங்கு மாட்டிக் கைது செய்வது போன்றவற்றைக்கூட neutralize செய்வது என்று கொள்ளலாம்.
வேதியியலைப் பொறுத்தவரை ஒரு அமிலத்தை neutralize செய்வதென்றால் வேறு எதையோ அதில் கலப்பதன் மூலம் அதை அபாயகரமாக இல்லாமல் ஆக்குவது என்று பொருள்.
Boy என்பதன் opposite Girl என்று கூறக் கூடாதாமே! - இவர்கள் இருவரும் எல்லா வற்றிலும் நேரெதிரான கருத்துகளும் செயல்பாடுகளும் கொண்டவர்கள் இல்லையே. Boy என்பது male gender. Girl என்பது அதன் female gender. சொல்லப்போனால் Tall-short, Honest-Dishonest போன்றவற்றைக்கூட opposites என்று கூறக் கூடாது. அவை antonyms. (Synonyms என்பவை ஒரே பொருள் கொண்ட வார்த்தைகள்). Opposite என்பது எதிர்ப்பக்கத்தில் என்ற பொருள் கொண்டது. My house is opposite to yours என்பது போல.
Will என்பதன் past tense என்ன? - ஒரு அடிப்படை verbஐ அடிப்படையாகக் கொண்டு tenses உருவாக்கப்படுகின்றன. I come. I came. I will come. சில சமயம் I will என்று மட்டுமே பதில் அளித்தால் கூட, அதில் மறைமுகமாக verb காணப்படும். Will you come? I will (come). Will you send this? I will (send). Will என்பதற்கான past tense form என்று எதுவுமில்லை. கடந்த காலத்தில் நடைபெறவிருந்த அல்லது எதிர்பார்க்கப்பட்ட செயல்களைக் குறிப்பிட would என்பது பயன்படுகிறது. He said he would call me in the evening, but he forgot. If I had more time, I would learn a new language.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT