Last Updated : 11 Mar, 2025 06:27 AM

 

Published : 11 Mar 2025 06:27 AM
Last Updated : 11 Mar 2025 06:27 AM

Cacophony என்றால் என்ன? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 122

Going south, going north போன்றவை எதைக் குறிக்கின்றன?

ராமேஸ்வரம் செல்வது, காசிக்குச் செல்வது போன்றவற்றை இவை குறிக்கவில்லை. உலக வரைபடத்தைப் பார்த்தால் தெற்கு என்பது கீழ்ப்பகுதி. ஒருவரது வியாபாரம் சரிந்து கொண்டிருக்கிறது என்றால் அதை going south இன்று வர்ணிப்பார்கள். முன்பெல்லாம் going north என்ற பயன்பாட்டைக் கேள்விப்பட்டதில்லை. இப்போது வளர்ச்சி அடையும் நிலையை going north என்பதன் மூலம் குறிக்கிறார்கள்.

Litmus Test என்பது என்ன வகையான சோதனை?

Litmus என்னும் பொருள் நிறமாற்ற இயல்பு கொண்டது. அமிலத்தில் அதை வைத்தால் சிவப்பாக மாறும். காரப் பொருளோடு (alkali) தொடர்பு கொண்டால் நீலமாக மாறும். ஒரு பொருள் அமிலமா, காரப் பொருளா என்பதை உறுதி செய்துகொள்ள, இப்படிச் செய்யும் சோதனையைத்தான் litmus test என்று கூறி வந்தார்கள்.

இப்போது பேச்சு வழக்கில் litmus test என்பது வேறு ஒன்றைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, பெண் கல்வி குறித்து ஓர் அரசியல்வாதி கொண்டுள்ள கருத்து என்பது பெண்களின் உரிமைகளைக் குறித்து அவர் கொண்டுள்ள எண்ணங்களை வெளிப்படையாக்க வாய்ப்பு உண்டு. இதைக் குறிக்க His policy on women education is a litmus test on his views on women’s rights எனலாம்.

Phone என்பது ஒலி தொடர்பான சொல் என்பதை அறிவேன். Cacophony என்றால் என்ன?

கேட்கச் சகிக்காத குரல் அல்லது ஒலி என்று பொருள். Asterix என்கிற பிரபல காமிக்ஸ் தொடரில் Cacofonix என்று ஒரு கதாபாத்திரம் உண்டு. அவர் பாடினாலே ஊரே நடுங்கும், மக்கள் தெறித்து ஓடுவார்கள். Caco என்றால் இனிமையற்ற, தாறுமாறான என்று பொருள்.

Phone என்பது ஒலியைக் குறிக்கும் சொல். Microphone, Dictaphone, Telephone, Saxophone, Headphone. Homophone என்பது வெவ்வேறு எழுத்துகள் கொண்ட ஆனால் கேட்பதற்கு ஒரே மாதிரி ஒலிக்கும் வார்த்தைகள். Two-too, buy-bye, peace-piece, sea-see என்பதுபோல்.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x