Last Updated : 04 Mar, 2025 06:29 AM

 

Published : 04 Mar 2025 06:29 AM
Last Updated : 04 Mar 2025 06:29 AM

Collegium என்பது எதைக் குறிக்கிறது? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 121

ஒருவருக்கொருவர் ஆலோசித்து இணைந்து தீர்மானங்களை எடுக்கும் குழுவை கொலிஜியம் என்று குறிப்பிடுவார்கள். குறிப்பாக இந்திய நீதித்துறையில் இந்தச் சொல் அதிகம் பயன்படுகிறது.

இந்தக் குழுவில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகளில் சிலர் இடம் பெறுவர். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவது மற்றும் மாற்றப்படுவது போன்றவற்றை இந்த அமைப்பு தீர்மானிக்கும்.

‘Collegium’ என்பது லத்தீன் சொல். அந்த மொழியில் இது ‘அதிகாரப் பகிர்வு கொண்ட, இணைந்து பணியாற்றும் ஒரு குழுவை’க் குறிக்கிறது.

Chances of survival of workers are bleak என்று ஒரு செய்தித் தலைப்பில் படித்தேன். Bleak என்பது எதைக் குறிக்கிறது?

சுரங்கம் இடிந்து அதனுள்ளே மாட்டிக்கொண்ட தொழிலாளிகள் குறித்த செய்தியில் நீங்கள் இப்படிப் படித்திருக்க வாய்ப்பு உண்டு. Bleak என்பது நம்பிக்கை தரும் விதத்தில் அற்ற என்று பொருள் தரும் சொல். I see a bleak future என்றால் என் வருங்காலம் நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை என்று பொருள்.

ஒரு நிலப்பகுதியை bleak என்று குறிப்பிட்டால் அது ‘பசுமையற்ற’ என்பதை உணர்த்தும். (The bleak Antarctic landscape).
The house stands on a bleak hilltop எனும்போது அது வரவேற்கும்படியாக இல்லாத ஒரு குன்றின் உச்சியைக் குறிக்கிறது.

“Taking care of my sick parents really takes a lot out of me.” என்பது ‘எனது நோயாளிப் பெற்றோர்களைக் கவனித்துக்கொள்வதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது’ என்பதைக் குறிக்கிறதா?

அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பதையும் அதனால் அதிகக் களைப்பு ஏற்படுகிறது என்பதையும் குறிக்கிறது. ‘Takes a lot out of’ என்பது சாதாரணக் களைப்பைவிட அதிகமான அளவைக் குறிக்கிறது. உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் சக்தி இழப்பதைக் குறிக்கிறது.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x