Published : 25 Feb 2025 06:17 AM
Last Updated : 25 Feb 2025 06:17 AM
Scent, Perfume, Deodorant, Deo ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன? - Perfume என்பதும் scent என்பதும் பேச்சு வழக்கில் ஒரே பொருளைக் குறிக்கும் சொற்கள். அதாவது, நறுமணம் வீசும் வாசனை திரவியம். இவற்றை உடைகளின் மீதோ மணிக்கட்டிலோ தடவிக் கொள்ளும்போது நம்மைச்சுற்றி ஒரு நறுமணம் சிறிது நேரத்துக்காவது இருக்கும்.
இதில் முக்கியமாகப் பூக்களின் சாறு மற்றும் சிலவகை எண்ணெய் ஆகியவை இருக்கும். பொதுவாக scent எனப்படும் scented oil என்பதில் பூக்களின் சாறு குறைவாகவும் எண்ணெய் அதிகமாகவும் இருக்கும். எனவே perfume என்பதன் விலை scentயைவிட அதிகமாக இருக்கும்.
Deodorant என்பதன் சுருக்கம்தான் deo. வியர்வையைத் தன்னுள் இழுத்துக் கொள்வதன் மூலமாகவும் பாக்டீரியாக் கிருமிகளைக் கொல்வதன் மூலமாகவும் உடலிலிருந்து எழும் துர்நாற்றத்தை இது தடுக்கிறது.
Couldn’t, didn’t போன்ற வார்த்தைகளை எப்படி உச்சரிப்பது? - குடின்ட், டிடின்ட்
I like my job என்பதும், They live with their children என்பதும் இயல்பான வாக்கியங்கள். ஆனால், it likes its job என்பதும் it lives with its children என்பதும் நெருடலாக உள்ளனவே. ஒரு வேளை its என்ற சொல்லை இப்படியெல்லாம் பயன்படுத்த முடியாதோ? - Job என்பதையும் children என்பதையும் நாம் மனிதர்களோடு பழக்கப்படுத்திப் பார்த்து விட்டதால் இப்படி இருக்கிறது. மற்றபடி இலக்கணப்படி அந்த வாக்கியங்கள் சரிதான். It (the peacock) likes its appearance.
It lives with its younger ones என்று மாற்றி விட்டால் சரியா? - Oxford is famous for its university என்பது போன்ற வாக்கியங்கள் நெருடல் இல்லாமல் இருக்கும்.
Would you like some tea? இப்படி ஒருவர் கேட்டால் ‘மற்றபடி தேநீர் விசுவாசியான ஆனால் அந்த சமயத்துக்கு தேநீர் குடிக்க வேண்டும்போல் இல்லாத’ நான் ‘I like tea. But I don’t need it now’ என்று பதிலளிக்க வேண்டுமா? - Would you like என்று ஒருவர் கேட்டாலே Do you want என்றுதான் பொருள். எனவே உங்களுக்கு தேநீர் அப்போது தேவை இல்லை என்றால் (மற்றபடி உங்களுக்கு தேநீர் பிடிக்கும் என்றால் கூட) No என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளிக்கலாம்.
Lawyer, solicitor, barrister ஆகியோரெல்லாம் ஒருவர்தானா? - சட்ட ஆலோசனை சொல்லத் தகுதியுள்ளவர்கள் lawyers. Solicitor, Barrister ஆகிய இருவருமே lawyersதான். பொதுவாக solicitor என்பவர் சட்ட ஆவணங்களைத் தயார் செய்வார். கீழ் நீதிமன்றங்களில் தங்கள் கட்சிக்காரர்கள் சார்பாகத் தோன்றுவார். Barrister என்பவர் மேல்நிலை நீதிமன்றங்களில் தங்கள் கட்சிக்காரர்களுக்காக வாதிடுபவர்கள். பெரும்பாலும் கடினமான சவாலான வழக்குகளை இவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT