Published : 18 Feb 2025 06:23 AM
Last Updated : 18 Feb 2025 06:23 AM
அதிரடி மன்னன் டொனால்டு ட்ரம்ப்பின் ‘அதிரடி நடவடிக்கைகள்’ என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடலாம்? -Aggressive actions என்ற வார்த்தைகளின் மூலம் குறிப்பிடலாம். அதிரடி மன்னன் என்பதைக் குறிப்பிட வேண்டுமென்றால் நடிகர் அர்ஜுனின் முன்னொட்டைத்தான் பயன்படுத்த வேண்டும். Action king!
Question என்பதை கொஸ்ட்டின் என்று உச்சரிக்க வேண்டுமா அல்லது கொஸன் என்று உச்சரிக்க வேண்டுமா? - ‘க்வெஸ்ச்சன்'.
Insurance policy என்பதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்தால் விசித்திரமாக இருக்கிறதே! - Policy என்றால் கொள்கை. இன்சூரன்ஸ் பாலிசியை மேஜை மீது வைத்திருந்தேன் என்பதுபோல் பயன்படுத்தும்போது காப்பீட்டுக் கொள்கையை மேஜை மீது வைத்திருந்தேன் என்று மொழிபெயர்த்தால் விசித்திரமாகத்தான் இருக்கும். Insurance policy என்பதை காப்பீட்டு ஆவணம் என்று குறிப்பிடலாம்.
Cop என்பதை போலீஸ்காரர், திருடன் ஆகிய இருவருக்கும் பயன்படுத்துகிறார்களே! - அது அப்படி அல்ல. Cop என்பது காவல்துறை ஊழியரை (குறிப்பாக அதிகாரியை) குறிக்கிறது. The cops arrived at the crime scene. Cop என்பது verb ஆக பயன்படும்போது ‘ஒன்றைப் பறிமுதல் செய்வது அல்லது கைவசப்படுத்துவது’ என்று அர்த்தம் தருகிறது. அதாவது, குற்றவாளிகளைப் பிடிப்பது என்ற பொருளை அளிக்கிறது. இதனால்தான் அது பெயர்ச்சொல்லாகப் பயன்படும்போது காவல்துறையினரைக் குறிக்கிறது.
இதையே வேறொரு கோணத்தில் பார்க்கும்போது திருடர்களும் சில பொருள்களை 'பிடிக்கிறார்கள் அல்லது கைவசப்படுத்துகிறார்கள்’. எனவே cop என்பது verb ஆகப் பயன்படும்போது (பேச்சுவழக்கில்) திருடுதல் என்று பொருள் தருகிறது. Someone has copped my purse. ஒன்றை ஒத்துக்கொள்வது என்ற பொருளில்கூட cop என்ற சொல்லைப் பயன்படுத்துவது உண்டு. The children copped to lying about the date of their examination.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT