Published : 11 Feb 2025 06:31 AM
Last Updated : 11 Feb 2025 06:31 AM
நன்றாகச் சொன்னீர்கள் என்ற பாராட்டை ஆங்கிலத்தில் You expressed right எனலாமா?
‘நல்லாச் சொன்னீங்க’ எனும்போது அவர் கூறியதோடு நீங்கள் ஒத்துப் போகிறீர்கள். சொல்லப்போனால் உங்கள் கருத்தை அவர் மேலும் சிறப்பாகக் கூறியிருக்கிறார் என்று கருதுகிறீர்கள். Well said! There you are! You said it right. Perfect. இவற்றில் எதையும் கூறலாம்.
கோயில் பிரகாரத்தைச் சுற்றி வருகிறோம் அல்லவா, அந்தச் செயலுக்கு Rotate என்பது சரியா? பிரசாதம் என்பதற்கும் ஆங்கிலச் சொல் தேவை. Rotate என்பது தன் அச்சை மையமாகக் கொண்டு தானாகவே சுற்றுவது. பம்பரம், பூமி போன்றவை rotate செய்கின்றன. circumambulate என்பது ஒன்றைச் சுற்றி வருவதைக் குறிக்கும். பிரதட்சணம் செய்வதைக் குறிக்க இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாம். பிரசாதத்தைக் குறிக்க sacred offering என்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.
Fragile truce என்பது என்ன? - Fragile என்றால் எளிதில் உடையக்கூடிய என்று பொருள். பீங்கான், கண்ணாடிப் பொருட்கள் fragile ஆனவை. Truce என்றால் போர் நிறுத்தம். குறிப்பாகத் தற்காலிக போர் நிறுத்தம். இரு நாடுகள் போர் புரிகின்றன. ஏதோ காரணத்துக்காகப் போர் நிறுத்தம் செய்கின்றன. அப்போது நிலவுவது fragile truce என்றால் அந்த நாடுகளுக்கு இடையே உள்ள விரோதப் போக்கு மறைந்து விடவில்லை. எப்போது வேண்டுமானாலும் போர் நிறுத்தம் கைவிடப்பட்டு யுத்தம் தொடரக் கூடும் என்று பொருள்.
I could have died என்பதன் பொருள் என்ன? - உங்களையும் அறியாமல் ஒரு பாறையின் விளிம்புக்குச் சென்று விட்டீர்கள். இன்னும் ஓர் அடி எடுத்து வைத்து விட்டால் நீங்கள் கீழே அதலபாதாளத்தில் விழுந்து இறக்க வேண்டியதுதான். இந்த சூழலில் நீங்கள் ‘நான் இறந்திருக்க வேண்டியவன்’ என்ற பொருளில் I could have died என்று பின்னர் கூறக்கூடும். ஆனால், இதை idiomஆகப் பயன்படுத்தும்போது ‘நான் மிகவும் தர்ம சங்கடமாக உணர்ந்தேன்’ என்கிற பொருளை அது அளிக்கிறது. அதாவது இப்படி ஒரு சூழலில் சிக்கிக் கொண்டதற்குப் பதிலாகப் பேசாமல் இறந்திருக்கலாம் என்கிற அர்த்தத்தில்.
They never have, and never will allow such practices என்பதன் பொருள் என்ன? - அவர்கள் இத்தகைய நடைமுறைகளை ஒருபோதும் மேற்கொண்டதில்லை. இனி மேற்கொள்ளவும் மாட்டார்கள் என்பதுதான் அதன் பொருள். ஆனால், அந்த வாக்கியத்தை அப்படிப் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் never have என்பதற்குப் பிறகு வரும் சொல் allowed என்பதுதான் (allow அல்ல). எனவே They never have allowed and never will allow such practices என்றே எழுத வேண்டும்.
Lowbrow என்று யாரைக் குறிப்பிடுவோம்? - புத்திசாலியாகவோ நாகரிகமாகவோ இல்லாத ஒருவரை அப்படிக் குறிப்பிடு வோம்.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT