Last Updated : 28 Jan, 2025 06:12 AM

 

Published : 28 Jan 2025 06:12 AM
Last Updated : 28 Jan 2025 06:12 AM

Ring என்பதற்கு ஒரு நகைச்சுவை எடுத்துக்காட்டு! | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 116

Footfall of 20 lacs என்று கண்காட்சி தொடர்பான ஒரு செய்தித் தலைப்பைப் படித்தேன். Footfall என்பது எதைக் குறிக்கிறது? அந்தக் கண்காட்சிக்குச் சென்ற இவ்வளவு பேரா தடுக்கி விழுந்திருப்பார்கள்?

உங்கள் கேள்வியில் குறும்பு தெரிகிறது. நுழைவாயில் வழியாக எவ்வளவு பேர் நுழைந்தார்கள் என்பதைக் குறிக்கும் சொல் அது. நேரடியாகக் கடைக்கு அல்லது வணிகக் களத்துக்கு வந்தவர்களின் எண்ணிக்கையை இது குறிக்கிறது. ஆன்லைன் வாடிக்கையாளர்கள் அல்ல.

எந்த நேரத்தில் அதிக வாடிக்கையாளர்கள் வருகிறார்கள் என்பதைக் கணித்து விற்பனையைப் பெருக்குவதற்கும் footfall ஆய்வு உதவுகிறது. சராசரியாக எவ்வளவு வாடிக்கையாளர்கள் நுழைந்தால், ஒரு பொருள் விற்பனையாகிறது என்கிற விகிதத்தைக் கணிக்கவும் இது உதவுகிறது.

Ring என்பது சிலேடையாகப் பயன்படுத்தப்படுவதை நகைச்சுவையான எடுத்துக்காட்டுடன் விளக்க முடியுமா?

“இன்று மாலை என் கணவருடன் நகைக் கடைக்குப் போகிறேன். எனக்கு மோதிரம் வாங்கித் தருவதாகச் சொன்னார்” என்று ஒரு பெண் கூற, அவரது அண்ணன் “நம்ப முடியவில்லையே.

‘Today evening I will give you a ring' என்று உன் கணவர் கூறியிருப்பார். நீ தவறுதலாகப் புரிந்து கொண்டிருப்பாய்” என்று நகைச்சுவையாகப் பதிலளித்தார். I will buy you a ring என்றால் “நான் உனக்கு ஒரு மோதிரத்தை வாங்கி தருவேன்’ என்று பொருள். ‘I will give you a ring’ என்றால் “நான் உன்னைத் தொலைபேசியில் தொடர்புகொள்வேன்” என்று பொருள்.

Ring என்பது வட்டம் என்கிற பொருளில்தான் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் வட்டமாக இருக்கும் மோதிரத்தையும் இப்படிக் குறிப்பிடத் தொடங்கினார்கள்.

வட்டத்துக்குத் தொடக்கமும் முடிவு கிடையாது. சுற்றிச் சுற்றி வரும். அதுபோல தொலைபேசி அழைப்புகளும், எடுக்கப்படும்வரை மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஒரேமாதிரி ஒலிக்கும். இதுவே இரண்டுக்கும் ring என்று சொல்லைப் பயன்படுத்த வைத்திருக்க வேண்டும்.

ஒரு செய்தியில் he bows out எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவர் வணங்கினார் என்று அர்த்தமா?

Bows out என்பது ஒரு பதவியிலிருந்து அல்லது பொறுப்பில் இருந்து பின் வாங்கிக் கொள்வது அல்லது விலகுவதாகும். After 10 years as Managing Director, she decided to bow out. He bowed out of the debate when the opponent started using harsh words.Bows out என்பதற்கு இணையாக exit gracefully, resign, withdraw, step down போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x