Last Updated : 21 Jan, 2025 06:12 AM

 

Published : 21 Jan 2025 06:12 AM
Last Updated : 21 Jan 2025 06:12 AM

Verbal noun தெரியுமா? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 115

Pure risk என்கிற சொற்களைக் காப்பீடு தொடர்பாகக் கேள்விப் பட்டேன். அதென்ன pure risk? - ரிஸ்க் என்பது ‘ஏற்பட வாய்ப்புள்ள ஒரு ஆபத்து’. அவ்வளவாக நீச்சல் தெரியாதவர் கடலில் நீச்சலடிப்பது ஒருவிதமான ரிஸ்க். கடல் அலைகளில் ஒருவர் இழுத்துச் செல்லப்படும்போது அவரை நீச்சல் தெரியாத ஒருவர் காப்பாற்ற முயற்சி செய்வது மற்றொரு ரிஸ்க்.

ஒரு வீட்டை வாங்குகிறீர்கள். அந்த வீட்டில் தீப்பிடிக்கக்கூடும், அது வெள்ளத்தால் சிதிலமடையலாம், அந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்படலாம். இவை எல்லாமே ரிஸ்க்குகள்தான். இவை எல்லாம் pure risks. அதாவது இவற்றின் மூலமாக உங்களுக்கு எந்த லாபமும் ஏ​ற்பட வாய்ப்பில்லை. அதேசமயம் இவை உண்டானால் உங்களுக்கு நஷ்டம் ஏற்படும். இதுபோன்ற ரிஸ்க்குகளுக்காக உங்கள் வீட்டை நீங்கள் இன்சூர் செய்ய முடியும்.

பங்குகளில் முதலீடு செய்வதும் ஒரு ரிஸ்க்தான். ஏனென்றால் பங்குகளின் மதிப்பு ஏறலாம், இறங்கலாம். அதாவது இதன்மூலமாக உங்களுக்கு லாபம் வரவும் வாய்ப்பு உண்டு. எனவே இது pure risk ஆகக் கருதப்பட மாட்டாது. இந்த வகை ரிஸ்க்குகளுக்கெதிரான இன்சூரன்ஸை காப்பீடு நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை.

Noun, Verbal noun இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? - Noun என்பது பெயர்ச்சொல் (Krishna, mountain, family போன்றவை). Verb என்பது வினைச்சொல் (eat, sit, drink).Verbal Noun என்பது பொதுவாக ஒரு verb ஓடு -ing என்பதைச் சேர்ப்பதால் உண்டாகிறது. அதே சமயம் அது ஒரு noun ஆகப் பயன்படுத்தப்படுகிறது. Build என்பது வினைச்சொல். They are building a building. இந்த வாக்கியத்தில் முதலில் இடம்பெறும் building என்பது verb. இரண்டாவதாக இடம்பெறும் building என்பது (verb-ல் இருந்து உருவாக்கப்பட்ட) noun. அதாவது verbal noun. The team’s staging of a play என்பதில் staging என்பது verbal noun.

Translate into English. Translate in English. இந்த இரண்டில் எது சரி? - In என்பது ஒரு நிலையைக் குறிக்கிறது. I am laying in my bed. My purse is in my bag. Into என்பது ஒரு அசைவைக் குறிக்கிறது. அதாவது நிலை மாற்றத்தைக் குறிக்கிறது.
He jumped into the river. They walked into the room. The caterpillar turned into a butterfly.
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றுவதுதான் translation. எனவே Translate into English என்பதே சரி.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x