பெரம்பலூரில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு


பெரம்பலூரில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மருத்துவ முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு வாரம் முழுவதும் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்.

மேலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளிகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணி மேற்கொண்டு குப்பையை அகற்ற வேண்டும். 5 நாட்க
ளுக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் அல்லது அவர்களது பெற்றோர் களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

விழிப்புணர்வு

பள்ளிகளில் மாணவர்களுக்கு டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

WRITE A COMMENT

x