Published : 18 Nov 2025 07:45 AM
Last Updated : 18 Nov 2025 07:45 AM
கனவுகள் இல்லாமல் ஒரு எட்டுகூட எடுத்து வைக்க முடியாது. யதார்த்தத்தின் குறுக்கீடு இல்லா மல் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடியாது. கொண்டாட்டம், குமுறல் இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை! சமுத்திரம், கனவு காணும் ஆசிரியர். எந்த நேரமும் படிப்பவர். சமீபத்தில் அவர் படித்த புத்தகம், ஏ.எஸ். நீல் எழுதிய ‘சம்மர் ஹில்’ (Summerhill). 1921இல் லண்டனில் நீல் உருவாக்கிய பள்ளி அது. நீல் இப்போது இல்லை. அதே பெயரில் அவரது மகள் தற்போது பள்ளியை நடத்துகிறார்.
‘சம்மர் ஹில்’ பள்ளியில் படிக்கும் மாணவர்கள்தாம் பள்ளியின் ஒவ்வோர் அசைவையும் முடிவெடுக்கிறார்கள்; தீர்மானிக்கிறார்கள். மாணவரை மையப்படுத்திய, அச்சமற்ற பள்ளி. மதம் கலவாத பள்ளி. பாடப்புத்தகங் கள், தேர்வுகள் மூலம் குழந்தைகளைக் கண்டறிய முடியாது என்பதை வலி யுறுத்திய பள்ளி. உலகம் முழுவதும் பெருமையோடு பேசப்பட்ட பள்ளி.
சுதந்திர வகுப்பறை: 1949இல் பள்ளியைப் பார்வையிட்ட இங்கிலாந்தின் கல்வித் துறை ‘சுதந்திரம்தான் இந்தப் பள்ளியின் முக்கியக் குறிக்கோள்’ என்று மதிப் பிட்டது. சமுத்திரத்தின் மனதில் ‘Summerhill’ இடம்பிடித்தது. சோர்வு ஏற்பட்ட போதெல்லாம் வாசித்தார். அடுத்த கட்டம் புரிந்தது.
யாருடனாவது நூலின் சாராம் சத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பி னார். ஆசிரியர்கள் யாரும் கேட்கத் தயாராக இல்லை. நேரம் கிடைத்தால் ‘அறுப்பார்’ என்று சமுத்திரம் பற்றிப் பள்ளியில் பேசிக்கொண்டார்கள். துணி மணிகள் பற்றிப் பேசினால் சுவாரசியம். புத்தகம் பற்றிப் பேசினால் அறுவை.
யாரிடம் பேசலாம்? மாணவர் களிடமே பேசலாம். பாடவேளையின் கடைசி 15 நமிடத்தில் பேசலாம். “குழந்தைகளின் படைப்பாற்றல் வகுப்பறையில் கொல்லப்படுகிறது” எனும் புத்தகத் தின் ஆதாரமான வாசகத்தை கரும் பலகையில் எழுதிப் போட்டார். பிறகு மாணவர்களிடம் நூல் பற்றிச் சுருக்கமாகச் சொன்னார். சிலர் கவனித் தார்கள்; சிலர் கவனிக்கவில்லை.
மாணவி பானுமதி உன்னிப்பாய்க் கவனித்தாள்; கடைசிவரை கவனித் தாள். இது போதும். சமுத்திரம் பேசி முடிக்கவும், மணி அடிக்கவும் சரியாக இருந்தது. கைதட்டினாள் பானுமதி. வகுப்பைவிட்டு வெளியே சென்ற சமுத்திரத்தைப் பின்தொடர்ந்தாள் பானுமதி. என்னம்மா? என்று கேட்டார் சமுத்திரம்.
உடனே பானுமதி கொட்டி னாள்: “சார்! டீச்சர் ஆவதுதான் என் கனவு. சம்மர்ஹில் புத்தகம் பற்றி நீங்கள் சொன்னது அருமை. டீச்சர் ஆனதும் முதல் வேலையா ‘சுதந்திர வகுப்பறை’யை உருவாக்குவேன் சார்”. கனவைத்தான் சொல்கிறாள். ஆனால், பானுமதி குரலில் உறுதி இருந்தது. பானுமதியைப் பெருமையாகப் பார்த்தார் சமுத்திரம்.
கணக்கை விரும்ப வைப்பவர்: சப்ரா அந்தப் பள்ளியின் புதிய கணித ஆசிரியர். அவரின் பாப் தலையும் பள்ளிக்குப் புதிது. சிறு வயதிலேயே தாயை இழந்தவர். புற்றுநோயோடு போராடிக் கொண்டிருக்கும் தந்தையைக் கவனித்துவந்தார். கணிதத்தில் வல்லவர். ஆனால், டியூசன் எடுக்க சம்மதிக்கவில்லை. கணிதப் பாடத்தில் சந்தேகம் கேட்டு வந்த மாணவர்களுக்குப் பள்ளி முடிந்த தும் பள்ளியிலேயே இலவசமாக எடுத் தார். கணக்கை விரும்ப வைத்தார்.
ஒரு நாள் சமுத்திரத்தைப் பார்த்தார் சப்ரா. மனந்திறந்து பேசினார். “சார்! டீச்சர் ஆவது என் ஆசை; என் கனவு; என் தந்தையின் விருப்பமும் கூட! டீச்சர் ஆயிட்டேன். ‘மாணவர் மைய வகுப்பறை’யை உருவாக்குவது என் லட்சியம். என் கனவும் அதுதான். இன்றைக்கு பரீட்சையின் ஆதிக்கத்தில் வகுப்பறை சுருண்டு கிடக்கிறது.
மாற்றுவேன் சார்! உங்களைப் போன்றவர் களின் வாழ்த்து எனக்கு வேண்டும்” என்றார் சப்ரா. சமுத்திரம் உருகினார். தான் பேச விரும்பியதை சப்ரா பேசுகிறார். தன் கனவை சப்ரா முன்னெடுத்துச் செல்கி றார். கனவும் யதார்த்தமும் நெருங்கி நிற்பதைச் சமுத்திரம் கண்டார். கனவும் யதார்த்தமும் வேறுவேறு அல்ல என்றும் முதல்முறையாக உணர்ந்தார். அன்புடன் சப்ராவிடம் கைகுலுக்கினார்.
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், எழுத்தாளர்; smadasamy1947@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT