Published : 18 Nov 2025 07:42 AM
Last Updated : 18 Nov 2025 07:42 AM
கற்றல் என்பது ஆசிரியர்களோ மற்ற வர்களோ உங்களுக்கு வழங்குவது அல்ல. சுவாசம்போல், பிடித்த உணவை அருந்துவதுபோல் உங்களுக்கு நீங்களே உருவாக்கிக் கொள்வது - ஜெரோம் புரூனர்.
அன்றாடம் நாம் இயல்பாகச் செய்யும் பல வேலைகளோடு கற்றலையும் இணைக்கிறார் ஜெரோம் புரூனர். தாய்மொழியில் இப்படித்தான் பேச வேண்டும் என உங்களைப் பழக்கியது யார்? குழந்தைப் பருவத்திலேயே நீங்களாக அதை முயன்று நிகழ்த்த வில்லையா எனும் கேள்வியோடு ‘ஒரு கற்றல் கோட்பாட்டை நோக்கி’ (Towards A Theory of Instruction) புத்தகத்தை இவர் தொடங்குகிறார். யாரோ பலனடை வதற்காக, மாண வர்களை அறிவாளி/முட்டாள் எனத் தரம் பிரிக்கும் அதிகாரத் திணிப்பாக கல்வி உள்ளது என்று அவர் பகிரங்கமாக விமர்சிக்கிறார்.
3 விதமான மாணாக்கர்: நோயாளி பற்றிய கவலையின்றிச் சிகிச்சை முறைகளைப் புனிதப் படுத்தி, அதை எப்படியெல்லாம் திணிக்கலாம் எனச் சிந்திக்கும் முரட்டு மருத்துவரோடு ஆசிரியர் களை இவர் ஒப்பிடுகிறார். உண்மைதான்! அறிவை வளர்க்கும் கற்றல் அனுபவங்களை மாணவர் களுக்கு அளிப்பதைவிட அதிக அழுத்தத்தைத் தேர்வுகளின் வழியே நாம் கொடுத்துவருகிறோம். மதிப்பெண்களைக் கொண்டு அவர் களைத் தரப்படுத்துவதை மைய மிட்டுச் சுழலுவதாகக் கல்வியை மாற்றிவிட்டோம்.
குழந்தைகள் மூன்று வகையான இயல்பூக்கங்களைக் கொண்ட வர்கள் என்கிறார் ஜெரோம். முதலாவது ஒலி அடிப்படையில், கேட்டலின் வழியே கற்கும் குழந்தை. இவரை வாய்விட்டு நிறைய பாராட்ட வேண்டும். காது பட வருகின்ற அனைத்தையும் இவர் கற்றுக்கொள்வார். இரண்டாவது, ஒளி வழியே கற்றுக்கொள்வது.
இந்த வகைக் குழந்தைக்கு கண்டிப்பாகக் கரும்பலகை யில் எழுதிக் காட்டுவது, ஓவியமாகத் தீட்டுவது, கண் முன்னே நிகழ்த்திகாட்டுவது அவசியம். என்னதான் பாராட்டுரைகள் காதில் விழுந் தாலும் ஆசிரியர் கொடுக்கும் சிறிய பரிசு இவர்களைக் கல்வியோடும் ஆசிரியரோடும் கட்டிப் போட்டுவிடும்.
மூன்றாவது, தொடு உணர்வின் வழியே கற்றல். இந்த வகைக் குழந்தைக்கு வகுப்பறையில் வெறு மனே சொல்வதன் மூலமும் கரும் பலகையில் எழுதுவதன் மூலமும் கற்றுக்கொடுத்துவிட முடியாது. இந்தக் குழந்தை எதையும் தொட்டு உணர்ந்து கற்றலில் ஊக்கம் பெறுவதால், செயல்முறைக் கற்றல் ஒன்றே வழி.

சுழல் பாடத்திட்டம்: வகுப்பறையில் குழந்தைகளை ஆசிரியர்கள் இது போன்று பிரித்து உணரப் பயிற்சி தரப்பட்டு உள்ளதா என்பதை ஒவ்வொரு பள்ளியும் சுயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது என்பதே ஜெரோமி னுடைய கோட்பாட்டின் அடிப்படை. இப்படித்தான் தனக்குள் கல்வி நிகழ்கிறது என்பதைக் குழந்தைகள் தங்களுக்குத் தாங்களே கண்டறிந்து விட்டால், வாழ்க்கை முழுவதும் கற்றல் தொடரும்.
மேற்கண்ட மூன்று வகைகளில் ஒரு வகைக் குழந்தைக்கு சம்பந்தம் இல்லாத இன்னொரு வகையில் ஆசிரியர் பாடத்தைத் திணிக்கும்போது அது தோல்வியில் முடிகிறது. “முட்டாள்” என்று அந்தக் குழந்தை மீது தவறான முத்திரைக் குத்தப்படுகிறது.
தான் வழங்கும் கல்வி முறையை ‘சுழல் பாடத்திட்டம்’ (Spiral Curriculum) என்கிறார். செயலற்ற கற்றலில் இருந்து விடுபட்டுச் செயல்பாட்டுக் கல்வி கற்பிக்கப் பட்டால், மூன்று வகைக் குழந்தை களும் கற்றலில் பேரார்வத்துடன் ஈடுபடுவார்கள்.
இந்தியா மாதிரியான மக்கள்தொகை அதிகம் கொண்ட நாட்டில் இது சாத்தியமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். நாம் வகுப்பறைகளில் 35 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்கிற விகிதாசாரத்தைக் கடைப்பிடிக்க முடிந்தாலே ஜெரோம் முன் மொழியும் கல்வி முறை நிச்சயம் நிறைவேறும்.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT