Published : 04 Jun 2025 07:12 PM
Last Updated : 04 Jun 2025 07:12 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் படகு சேவைக்கான கட்டணம் வியாழக்கிழமை முதல் உயர்த்தப்படுகிறது. அதன்படி, சாதாரண கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100ஆக உயர்த்தப்படுகிறது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பறைகளில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்றவை அமைந்துள்ளன. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படகு பயணம் மேற்கொள்கின்றனர். கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறும். இந்நிலையில் படகு, கட்டணம் நாளை (மே 5) முதல் உயர்கிறது. சாதாரண கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்படுகிறது. மாணவர்களுக்கான சலுகைக் கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆக உயர்த்தப்படுகிறது.
அதேவேளையில், சிறப்பு கட்டணம் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.300 ஆக நீடிக்கிறது. கட்டண உயர்வு நாளை நடைமுறைக்கு வருகிறது என பூம் புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT