Published : 22 Jan 2025 07:32 PM
Last Updated : 22 Jan 2025 07:32 PM
கொடைக்கானல்: ஒரே நேரத்தில் வானில் தெரியும் 6 கோள்களின் அணி வகுப்பை மாணவர்கள், பொதுமக்கள் காண ஜன.25, 26-ல் கொடைக்கானலில் உள்ள சூரிய ஆராய்ச்சி கூடத்தில் (சோலார் அப்சர்வேட்டரியில்) சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன்,யுரேனஸ் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் வானில் தெரியும் அரிய நிகழ்வு கடந்த ஜன.3-ம் தேதி பிப்.13-ம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. சூரியன் மறைவுக்கு பின் இந்த நிகழ்வை பார்க்கலாம். இவற்றில் நெப்டியூன், யுரேனஸ் ஆகியவற்றை தொலை நோக்கியால் மட்டுமே காண முடியும். மற்ற கோள்கள் கண்ணுக்கு எளிதாக தெரியும். பூமியில் இருந்து நாம் பார்க்கும் போது, ஒரே நேரத்தில் வானத்தில் தெரியும் இந்த 6 கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போன்று தெரியும்.
ஆனால், உண்மையில் ஒவ்வொரு கோளும் வெவ்வேறு தொலைவுகளில் இருக்கும். கடந்த 2022-ல் 5 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வானில் தெரிந்தன. தற்போது ஆறு கோள்கள் வருகின்றன. பிப்ரவரி 28-ம் தேதி மெர்குரியுடன் சேர்த்து 7 கோள்களை பார்க்கலாம். இந்த அரிய வான் நிகழ்வை ஜன.25, 26-ம் தேதிகளில் மாலை 6.30 மணிக்கு மேல் மாணவர்கள், பொதுமக்கள் இலவசமாக தொலைநோக்கி மூலம் பார்க்க கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சி கூடத்தில் (சோலார் அப்சர்வேட்டரியில்) சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொடைக்கானல், சென்னை,பெங்களூரு மக்கள் பிப்.13-ம் வரை இந்த அரிய நிகழ்வை பர்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT