Published : 01 May 2024 04:10 AM
Last Updated : 01 May 2024 04:10 AM

கொடைக்கானல் செல்ல இ-பாஸ் முறைக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு

பிரதிநிதித்துவப் படம்

கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் முறை அமல்படுத்தப் பட்டதற்கு சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள தங்களின் வருவாய் குறையும் என ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானலுக்கு சீசன் காலங்களில் அளவுக்கு அதிக மான வாகனங்கள், சுற்றுலா பயணிகள் என சுற்றுலாத் தலங்களே திணறும் அளவுக்கு கூட்டம் அலை மோதுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல், விடுதிகளில் இடம் கிடைக்காதது, சுற்றுலா இடங்களை குறித்த நேரத்தில் காண முடியாதது என ஏமாற்றத்துடன் பயணிகள் திரும்புகின்றனர். மேலும் அதிக வாகனங்களால் சுற்றுச்சூழல் சீர்கேடு, வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இவற்றை தவிர்க்க ஐஐடி, ஐஐஎம், சார்பில் ஆய்வு மேற் கொண்டு அறிக்கை தாக்கல் செய்யும் வரை இடைக்கால நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி மே 7 முதல் ஜூன் 30 வரை கரோனா காலத்தில் கடைப் பிடித்ததை போல கொடைக்கானல் செல்ல இ பாஸ் முறையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

எஸ்.மணிகண்டன்

இது குறித்து கொடைக்கானல் வந்த திருநெல்வேலியை சேர்ந்த எஸ்.மணிகண்டன் கூறியதாவது: இ பாஸ் நடைமுறையில் நன் மையும் உள்ளது, தீமையும் உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதால் அளவான வாகனங்களே கொடைக்கானல் வந்து செல்லும் இதனால் போக்கு வரத்து பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை. அளவான சுற்றுலா பயணிகள் வருவர் என்பதால் தங்கும் விடுதிகளில் அறைகளின் கட்டணத் தையும் உயர்த்த வாய்ப்பில்லை.

இது சுற்றுலா பயணிகளுக்கு ஏறறதாகத்தான் இருக்கும். ஆனால், இ பாஸ் எடுக்கும் நடைமுறையை அனைவரும் அறிந் திருக்க வாய்ப்பில்லை. அதைப் பெறுவதில் சிரமம் இருக்கலாம். திடீரென புறப்பட முடியாது, திட்டமிட்டு இ பாஸ் பெற்ற பிறகே கொடைக்கானல் செல்ல முடியும். மேலும் சுற்றுலாவை நம்பி தொழில் செய்யும் உள்ளூர் மக்க ளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏனென்றால் சீசன் நேரத்தில் மட்டும் அவர்கள் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என்று கூறினார்.

அப்பாஸ்

கொடைக்கானலை சேர்ந்த அப்பாஸ் கூறியதாவது: இ பாஸ் முறை குறித்து தெளிவான விளக்கம் இல்லை. நாள் ஒன்றுக்கு எத்தனை வாகனங்கள் அனுமதிக்கப்படும். எத்தனை சுற்றுலா பயணிகள் அனு மதிக்கப்படுவர் என்ற விவரம் தெளிவாக இல்லை. கொடைக்கானலில் வாகனங்களை நிறுத்த முறையான அடிப்படை வசதிகள் செய்து தருவது, போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீஸாரை நியமிப்பது, சுற்றுலா பயணிகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்று வது ஆகியவற்றை செய்தாலே இ பாஸ் முறை தேவையில் லாததாகி விடும் என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x