Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM
ரயில்களை தனியார்மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு மீண்டும் தொடங்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ரயில் சேவைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டின் மத்தியில் தொடங்கப்பட்டன. நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 ரயில்களை தனியார்மயமாக்க மத்திய அரசு தீர்மானித்தது. அவற்றில், சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்டநகரங்களுக்கு இயக்கப்படும்12 ரயில்கள், கன்னியாகுமரியில் இருந்து எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும் ரயில் ஆகிய 13ரயில்களை தனியார் மயமாக்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருந்த நிலையில், எந்த நிறுவனமும் அந்த தடங்களில் ரயில்களை இயக்குவதற்கு முன்வரவில்லை.
நீண்ட தொலைவு பயணத்துக்கு ரயில்களையே நம்பியிருக்கும் மக்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி. ரயில்களை தனியார் மயமாக்கினால், கட்டணம் எட்டாத உயரத்துக்குசென்றுவிடும். ரயில்களை தனியார்மயமாக்கும் முயற்சி தோல்வி அடைந்திருந்தாலும் அது தற்காலிகமானதுதான். ரயில்கள் தனியார்மயமாக்கப்படும் வாய்ப்புகள் இன்னும் முழுமையாக விலகவில்லை.
தனியார் நிறுவனங்கள் மக்களையும், ரயில்வே துறையின் கட்டமைப்புகளையும் சுரண்டுவதற்கே முயலும்.
எனவே, ரயில்களை தனியார்மயமாக்கும் முயற்சி தோற்றதாகவே இருக்கட்டும். மீண்டும் அந்த முயற்சியை மத்திய அரசு தொடங்கக்கூடாது. இவ்வாறுஅவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT