Published : 19 Nov 2021 03:08 AM
Last Updated : 19 Nov 2021 03:08 AM
இன்று நடக்க இருந்த அமைச்சரவைக் கூட்டம், கனமழை காரணமாக நாளை மாலை 6 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு,மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் குறித்து ஆலோசிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கனமழை காரணமாக அமைச்சரவைக் கூட்டம்நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அமைச்சரவைக் கூட்டம் நவ.19-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு கூட்டப்படும்என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ளது.
எனவே, அந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக அமைச்சரவைக் கூட்டம்நவ.20-ம் தேதி (நாளை) மாலை6 மணிக்கு நடக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT