Published : 10 Nov 2021 03:06 AM
Last Updated : 10 Nov 2021 03:06 AM
பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் திமுக எம்பி ரமேஷுக்கு வரும் 22-ம் தேதி வரை காவலை நீட்டித்து கடலூர் தலைமை குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பனிக்கன்குப்பம் கிராமத்தில் திமுக எம்பிடிவிஆர்எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. அங்கு பணியில் இருந்த தொழிலாளர் கோவிந்தராஜ் கடந்தசெப்.17-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். சிபிசிஐடி போலீஸாரால் இது கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதில் 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். கடந்த அக்.11-ம் தேதி பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் எம்பி ரமேஷ் சரணடைந்தார். நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து, அவர் கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் 13-ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். நவ. 9-ம் தேதி (நேற்று) வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
22-ம் தேதி வரை காவல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT