Published : 08 Oct 2021 03:11 AM
Last Updated : 08 Oct 2021 03:11 AM

மாணவர்களுடன் வகுப்பில் பெற்றோர் அமர அனுமதி : பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்

திருச்சி

நவ.1-ம் தேதி பள்ளிகள் திறந்த பின்பு முதல்முறையாக பள்ளிக்கு வரும் 1-ம் வகுப்பு மாணவர்களுடன் வகுப்பில் பெற்றோரும் அமர அனுமதி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நவ.1-ம் தேதியிலிருந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இதில், 1-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் முதல்முறையாக பள்ளிக்கு வரவுள்ளனர். முகக்கவசத்தை எவ்வளவு நேரம் அணிந்திருக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாது.

எனவே, 1-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுடன், அவர்களது பெற்றோரும் வகுப்பறையில் அமர்ந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். ஆனால், அவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து கொண்டுவெகுநேரம் உட்கார முடியாவிட்டால், குழந்தைகளை கையோடு அழைத்துச் சென்றுவிடலாம்.

அதே சமயம் மாணவ - மாணவிகள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x