Published : 15 Sep 2021 03:10 AM
Last Updated : 15 Sep 2021 03:10 AM
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்கார்த்திகை தீபத் திருவிழா நவ.7-ல் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வாக, நவ.19-ல் அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்கப் பணிகளை தொடங்குவதற்காக, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நாளை (16-ம் தேதி) அதிகாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் நடைபெறவுள்ளது. ராஜகோபுரம் முன்பு, மங்கள இசை ஒலிக்க, வேத மந்திரங்களை சிவாச்சாரிகள் முழங்க பந்தக்கால் நடப்படும். பின்னர், பந்தக்காலுக்கு கற்பூர தீபாராதனை செய்யப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT