Published : 22 Aug 2021 03:13 AM
Last Updated : 22 Aug 2021 03:13 AM
டெல்டா மாவட்டங்களில் மழை பெய்துள்ளதைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியில் இருந்து 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. பாசனத் தேவைக்கு ஏற்ப கூடுதலாகவும், குறைவாகவும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5 ஆயிரத்து 352 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 5 ஆயிரத்து 712 கனஅடியாக உயர்ந்தது. இதனிடையே, நேற்றுமுன்தினம் வரை விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர்பாசனத்துக்கு திறந்துவிடப்பட்ட நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்துள்ளதால், பாசனத்துக்கான நீர் தேவை குறைந்ததைத் தொடர்ந்து நேற்றுநண்பகல் முதல் 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 700 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 66.45 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 65.69 அடியானது. நீர் இருப்பு 29.10 டிஎம்சி-யாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT