Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM
சேலத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமியை சந்தித்த அமமுக மாவட்ட செயலாளர்கள் 3 பேர் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமியை, சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அமமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், பொன்னேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ-வுமான பொன் ராஜா, மத்திய சென்னை மாவட்டசெயலாளர் சந்தான கிருஷ்ணன், வடசென்னை மத்திய மாவட்ட செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் சந்தித்தனர். 3 பேரும் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT