Published : 06 Apr 2021 03:15 AM Last Updated : 06 Apr 2021 03:15 AM
தருமபுரி, திண்டுக்கல் மாவட்ட மலைக் கிராமங்களுக்கு - கழுதைகள், குதிரைகளில் கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் :
நத்தம் தொகுதிக்கு உட்பட்ட மலையூர் மலைக் கிராமத்துக்கு போக்குவரத்து வசதி இல்லாததால் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள். (அடுத்த படம்) தருமபுரி மாவட்டம் கோட்டூர் மலைக் கிராமத்துக்கு கழுதை மீது கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.
தருமபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள மலைக் கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு, கழுதைகள் மற்றும் குதிரைகள் மூலமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நேற்று கொண்டு செல்லப்பட்டன.
WRITE A COMMENT